ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்: அதிகபட்சமாக தலா ரூ.17,951 கிடைக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்: அதிகபட்சமாக தலா ரூ.17,951 கிடைக்கும்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 12.30 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
இந்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் மொத்தம் 17 மண்டலங்களில் பல்வேறு வகையான பிரிவுகளில் மொத்தம் 12.30 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் ஆயுதபூஜை பண்டிகையின்போது போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2016-17-ம் ஆண்டுக்கு 78 நாட்கள் ஊதியம் பண்டிகை போனஸாக வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இதன்மூலம் 12.30 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.ஒவ்வொரு ஊழியருக்கும் தலா ரூ.17,951 கிடைக்கும். இதற்காக மொத்தம் ரூ.2,245.45 கோடி செலவாகும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக ரயில்வே ஊழியர்களுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே ஊழியர்கள் அதிருப்தி

டிஆர்இயு (தட்சன் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்) உதவி தலைவர் ஆர்.இளங்கோவன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ரயில்வேயில் 6 ஆண்டுகளில் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.காலியிடங்களை நிரப்பாததால், ரயில்வே ஊழியர்களின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் பணியின் அளவு பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால், ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய போனஸ் தொகையில் 6 ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லை. எனவே, போனஸ் தொகையை உயர்த்தி வழங்காமல் இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி