தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2017

தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, இன்று முதல் வேலைநிறுத்தத்தில்ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, தலைமைச் செயலக ஊழியர்கள்நேற்று பணியின்போது கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அதேசமயம், இந்த சங்கத்தின் ஒரு பிரிவினர் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி