ஓர் கணினியின் கண்ணீர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2017

ஓர் கணினியின் கண்ணீர்

தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் நியமனத்தின் போது பி.எட்., படித்த கணினி ஆசிரியர்களை மட்டுமே நிரப்ப வேண்டும்..!!*

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி…

மேலும், அதற்காக தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல் பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கணினி ஆசிரியர்களுக்கு இச்செய்தி மகிழ்வை தந்தது; அடுத்த கணமே கணினி ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக அரசு பள்ளி *அறிவியல் ஆசிரியர்களுக்கு* கணினி பயிற்சி வழங்க முடிவு செய்தது 40,000 கணினி ஆசிரியர்களும் வாழ்வாதாரத்தை இழக்கும் விதமாக அமைந்துள்ளது.

இது எந்த விதத்தில் நியாயம்..?? தமிழுக்கு-தமிழ் ஆசிரியர், ஆங்கிலத்திற்கு-ஆங்கில ஆசிரியர், கணிதத்திற்கு-கணித ஆசிரியர்… என மற்ற பாடங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த ஆசிரியர்கள் பணியில் இருக்கும்போது கணினி அறிவியலுக்கு கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், அறிவியல் ஆசிரியர்களை நியமனம் செய்ய முயற்சிப்பது எந்த விதத்தில் சரியாகும்..??

அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆகிவிடலாம், என்ற கனவுகளுடன் கடன்பட்டு பி.எட்., படித்த 40,000-கும் மேற்பட்ட கணினி அறிவியல் பட்டதாரிகளை சபித்துவிட்டது தமிழக அரசு.

*40,000 கணினி ஆசிரியர்கள் வாழ்வில் கண்ணீர் தந்த செய்தி:*

இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கணினி அறிவியல் பாடத்தை அறிவியல் பாடத்துடன் தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.

*தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை…*

மற்ற பாட ஆசிரியர்களுக்கு இல்லாத ஓர் உயரிய நிலை கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் உண்டு தமிழகத்தில்…

"கடந்த இரண்டு, மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும்” என்று முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன... இதில், ஆளும் அரசும் அடக்கம். 

ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வழக்கம்போல எங்களை மறந்துவிடுகிறார்கள். மாநிலம் முழுக்க 39,019 (as on 31-12-2016 RTI Report) பேர் இப்போது பி.எட்., படிப்பை முடித்துவிட்டு அரசு வேலை வழங்கும் என்று நம்பியிருந்த நிலையில் தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

மொத்தமாக 39,019 பேரும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் 63 முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால் எந்த பலனும் இல்லை. பள்ளிக்கல்வித் துறையிலும் பலமுறை மனு அளித்துள்ளோம். இது *”அரசின் கொள்கைமுடிவு”* என்று கூறிவிட்டு புறக்கணித்துவிடுகிறார்கள். 

எங்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவா என்றால், அதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. 

தற்போது இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் எங்களின் நிலையை விளக்கி 36-முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். பள்ளி கல்வித்துறையில் உள்ள அனைவருக்கும் மனு கொடுத்தும் இன்று பயினல்லா நிலைக்கு எங்கள் வாழ்வு தள்ளப்படும் நிலையில் உள்ளது.

இதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா..??

மற்ற பாட ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி தந்து கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தால், அரசின் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் (TNTEU) எதற்காக கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட்..?? 

40,000 கணினி ஆசிரியர்கள் வேலையின்றி தவிக்கும் இந்த சோகத்தில் B.E., படித்தவர்களுக்கு பி.எட்., அங்கீகாரம் கொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

(குறிப்பு : B.E., பாடத்தில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருந்தாலும் கணினி அறிவியல் பி.எட்., படித்தவர்கள் மட்டும் தான் இதனை பயில முடியும் என்பது கூடுதல் சிறப்பு). 

40,000 கணினி ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் கூட பணியாற்ற, தகுதியற்ற நிலைக்குக் கொண்டு சென்றதுதான் தமிழக அரசின் சாதனையா..?? இல்லை அரசின் கொள்கை முடிவா..??

*_கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்., படித்தவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு சலுகைகள்…._*

* தனியார் பள்ளிகளில் கூட பணி வாய்ப்புகள் இல்லை.

* ரூ.7000/- சம்பளம் வாங்கும் சிறப்பு/பகுதி நேர ஆசிரியர் பணி கூட மறுக்கப்பட்ட அவலம்.

* ஆசிரியர்கள் தேர்வில் (TET, TRB) கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து புறக்கணிப்பு.

* AEEO, DEO தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளோம்.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்திற்கு, பி.எட்., கணினி ஆசிரியர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்!! 

*வெ. குமரேசன்,*
மாநில பொதுச் செயலாளர்,
*9626545446*
*தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*
பதிவு எண் ®655/2014

17 comments:

  1. கணினி ஆசிரியர் பணி நியமனம் இல்லை என்றால் அரசின் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் (TNTEU) எதற்காக கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட். பட்டம் வழங்கப்படுகிறது?

    ReplyDelete
    Replies
    1. just oru Degree name ku pinadi pota tha pa....but B.Ed(Cs) No use

      Delete
  2. WINNERS TRB COACHING CENTER.COMPUTER SCIENCE.ADDRESS :C.S.I.BOYS HR.SEC.SCHOOL.P.S.PARK.ERODE.CLASS STARTS:SUNDAY(1-10-17),TIME:9:30AM TO 4.00PM,CONTACT NUMBER:8072087722

    ReplyDelete
  3. what is the syllabus for trb computer science?

    ReplyDelete
  4. இருக்குற சான்றிதழ்களுக்கு
    மதிப்பு (வேலைவாய்ப்பைத் ) தருவதற்கு அரசு முயற்சி செய்தால் நாடு முன்னேறும் நாட்டு மக்களும் முன்னேறுவர்கள்.

    "சரியான காலத்தே பயிர் செய்"
    என்பதற்கு இணங்க மனித வளத்தையும் அந்த அந்த
    காலத்தில் அரசு சரியான முறையில் பயன்படுத்தினால் நாட்டிற்கு நல்லது.

    எப்படி விவசாயத்தை கண்டு கொள்லாததால் ஏற்படும் விளைவுகள் மோசமான நிலையை எதிர்நோக்கி உள்ளதோ,
    அதே போலத்தான் படித்த படிப்பிற்கு சரியான வேலை வாய்ப்பையும் , எதிர்காலத்தையும் வகுக்காமல் போனால்,
    இன்று கேள்விக்குறியாக உள்ள வினாவிற்கு,
    நாளை மக்களிடம் பதிலாக பெறப்போகும் வாக்குகள் விடையளிக்கும்.

    ReplyDelete
  5. கணினி ஆசிாியா்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதேன். இதற்கு என்னதான் முடிவு. கடைசியில் கணிணி ஆசிாியா்கள் தற்கொலைதான் முடிவா

    ReplyDelete
  6. nan b.ed patiga endap patchaium eru govt namagu nan valivetuma ethrialla savutha oru mutiva erukum Anita mathri

    ReplyDelete
  7. nan b.ed patiga endap patchaium eru govt namagu nan valivetuma ethrialla savutha oru mutiva erukum Anita mathri

    ReplyDelete
  8. எதுக்கு நாம்
    தற்கொலை பண்ண வேண்டும்??? ??,

    நம்
    உழைப்பையும்,
    காலத்தையும் செலவு செய்து கிடைத்த
    பட்டத்தை மதித்து
    வாய்புக்களை கொடுக்காமல்
    இருக்கும்,
    அரசாங்கத்திடம் அந்த பட்டங்களைஒப்படைத்து விட்டு
    நஷ்ட ஈடு கேட்டு போராடுவோம்.

    ReplyDelete
  9. Nan 6years'ha romba kasta padren cs b. Ed padichitu nanbarkale ithukku enna thaan mudivu valvatha illai savatha enaku piriyala nam ondru thirandal nichayam vitri kidaikum

    ReplyDelete
  10. Government vela pota syllabus kealu nanba

    ReplyDelete
  11. ஏன் அறிவிப்பை மட்டும் கொடுத்து விட்டு Syllabus அறிவிக்காமல் காலம் தாழ்துகிறது அரசு???????

    கேட்டால் கொள்கை முடிவு .😐😶.. ..

    எது
    உங்கள் கொள்கை
    அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவன் கணினி அறிவு பெறக் கூடாது என்பதா?,,,,
    அல்லது
    கணினி அறிவியலை B.Ed பாடமாக படித்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது என்பதா?,,,,,???,

    எந்த பாட பிரிவாக இருந்தாலும் சரி என்று PGDCA, Diploma முடித்தவர்களை குறைந்த சம்பளத்தில் கொத்தடிமைகளாக
    வேண்டுமென்று நியமித்து,
    பின்
    அவர்கள் அங்கிகாரம் வேண்டும் என்று போராடும் போது, தகுதித் தேர்வை வைத்து வடிகட்டி அவர்கள் வாழ்க்கையிலும் விளையாடியதுதான்
    உங்கள் கொள்கை முடிவா?,,,,?????

    இன்று வரை கணினி அறிவியலை தனிப்பாடமாக அறிவிக்க முடியாது என்பது தான் உங்கள் கொள்கை முடிவா?,,,,,

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Ungaluku Vera velaiya illaiya. Pichai eduthavanidam adithu pudunkura kootam tan neengal. Poi pichai edunkada

    ReplyDelete
    Replies
    1. Suresh Sir,
      "யாவாராயினும் நா காக்க."
      அப்படி உங்களால் நா காக்க
      முடியவில்லையென்றால்,
      நீங்க Shutup பண்ணுங்க.

      Delete
  15. Sir mca b.ed mudichu tu eppo job varum nu wait pandern eppo than varum????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி