உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமைச் செயலர் ஆஜர் - அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வருமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமைச் செயலர் ஆஜர் - அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வருமா?

தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுவாமிநாதன் சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பாக ஆஜராகியுள்ளார்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவினை அடுத்து தலைமை செயலர் இன்று ஆஜரானார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததோடு, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவி செய்தது.

நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த வாரம் ஆஜராகினர்.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் ஆவணங்களுடன் தலைமைச் செயலாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

இதனிடையே இந்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமைச் செயலாளார் கிரிஜா வைத்தியநாதன் இன்று நீதிபதிகள் சுவாமிநாதன் சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேரில் ஆஜரானார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், போராட்டத்தைத் தொடர உள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். எனினும் அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாகவும், கோரிக்கைகள் தொடர்பாகவும் நீதிபதிக்கள் முக்கிய உத்தரவுகளை பிறப்பிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி