தமிழக அரசின் நிதியுதவியைப் பெற அனிதாவின் உறவினர்கள் மறுப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2017

தமிழக அரசின் நிதியுதவியைப் பெற அனிதாவின் உறவினர்கள் மறுப்பு.

நீட் தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட ரூ.7 லட்சம் நிதியுதவியை அவரது உறவினர்கள் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டனர்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.பிளஸ் 2 தேர்வில்1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்த அனிதா, மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தும், நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மருத்துவ படிப்புக்கானவாய்ப்பை இழந்தார். நீட் தேர்வில் 700-க்கு86 மதிப்பெண் மட்டுமே அனிதா எடுத்திருந்தார்.அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதியுதவியும் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு அறிவித்தது. அனிதாவின் இறுதிச்சடங்கு நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனிதாவின் வீட்டுக்குச் சென்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபிரியா, அரசு அளித்த ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அனிதாவின் குடும்பத்தினரிடம் அளித்தார்.ஆனால், அந்தக் காசோலையை அனிதாவின் குடும்பத்தினர் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.

 அனிதாவின் சகோதரர் மணிரத்தினம், "நீட் விவகாரத்தில் தமிழக அரசு சாதகமான முடிவை அறிவிக்க வேண்டும். எனது சகோதரிக்கு ஏற்பட்ட நிலைமை பிற மாணவர்களுக்கு ஏற்படக்கூடாது. அரசு நல்ல முடிவை அறிவித்தபின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்கிறோம்" என்று ஆட்சியரிடம் கூறிவிட்டார்.அரசு நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் அனிதாவின் சகோதரர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி