இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2017

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?

பள்ளிக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் குறைபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
வளரும் நாடுகளில் உள்ள மாணவர்களிடம் நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பள்ளிப்படிப்பு படித்துவரும் மாணவர்களில் பலர் எழுதவோ படிக்கவோ கூட்டல் கழித்தல் கூட தெரியாமலே பாதி பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். இந்த அளவிற்குத்தான் இந்தியாவில் அடிப்படைக் கல்வி உள்ளது.தரமான தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி வழங்கப்படாததால் திறமை குறைவு காரணமாக பட்டப்படிப்பு படித்தும் நிறைய பேர் குறைந்த சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். தரமான கல்வியை வழங்காதது என்பது மாணவர்களின் வளர்ச்சியை தடைபடுத்துகிறது. தரமற்ற கல்வி என்பது மாணவர்களுக்குஇழைக்கப்படும் அநீதி.இவ்வாறு உலக வங்கியின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதற்கான செயல் திட்டங்களை வகுத்து நல்ல புரிதலோடு மாணவர்களை உருவாக்க வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.உலக வங்கியின் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும் இந்தியாவின் கல்வித்தரம் இந்த அளவில்தான் உள்ளது என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இனியாவது பள்ளி கல்வி தரத்தை உயர்த்தமத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்ப்போம்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி