மத்திய பிரதேசத்தில் பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் போது 'ஜெய்ஹிந்த்' சொல்ல உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2017

மத்திய பிரதேசத்தில் பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் போது 'ஜெய்ஹிந்த்' சொல்ல உத்தரவு

மத்திய பிரதேச பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் போது, 'Yes Sir / Madam'-க்கு பதில், 'ஜெய்ஹிந்த்' சொல்ல வேண்டும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய் ஷா தெரிவித்துள்ளார்.
சாட்னா மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் பேசியபோது இதனை தெரிவித்தார். மேலும் அக்டோபர் 1ம் தேதி முதல் சாட்னா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த நடைமுறையை கடைப்பிடிக்க உத்தவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில கல்வித் துறை அமைச்சர் விஜய் ஷா கூறியதாவது:
தேசப்பற்றை மாணவர்களிடம் ஊட்டும் வகையில் 'ஜெய்ஹிந்த்' சொல்லும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் ஆலோசித்து மாநிலம் முழுவதும் இதை கடைபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் ஷா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி