ஆசிரியர் தின கவிதை - திரு சீனி.தனஞ்செழியன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2017

ஆசிரியர் தின கவிதை - திரு சீனி.தனஞ்செழியன்.

#அன்புள்ள வாத்திக்கு

வெவரம் தெரிஞ்ச ஒடனே
பள்ளிக்கு போடா மவனேன்னு
வம்படியா இழுத்து வந்து
உன் கிட்ட விட்டாக
அரை டவுசர தூக்கி பிடிச்சினு
மூக்கொழுகி நின்னப்ப
என் சிலேட்டுல
கைபிடிச்சி ஆ வரைஞ்ச
ஆசானே

அன்பால சொன்ன பாடம்
நெனப்பால நிக்குதைய்யா
தூக்கத்துல எழுப்புனாலும்
அந்த மனப்பாடம் மறக்கலய்யா
யார்யாரோ வந்தாங்க யார்யாரோ போனாங்க
கழுத வயச நான் கடந்தும்
எனக்கு வாத்தின்னா உன் நெனப்பு
மறக்காம தோணுதப்பு
பச்ச மண்ணு தான் என்ன
மனுசனா மாத்த நீ பட்ட பாடு பெரும்பாடு
அடிச்சும் சொன்ன அணைச்சும் சொன்ன
அதால தான் எப்பவுமே மனசுல நின்ன
மஞ்ச பைய தூக்கி நீ வருவ
உன் மத்தியான சோறுலயும் பங்கிட்டு தருவ
தாயா பதிஞ்ச உன் உருவ
தவறியும் மறக்கல நான் குருவே
எவ்வளவோ ஒசரம் நான் வந்தாச்சு
எப்போதும் உன்ன பத்தி தான் இருக்குது என் பேச்சு
நீ தானய்யா என் முன்னேற்ற மூச்சு
இது நீ வளத்த புள்ள பேசும் பேச்சு
நீ நல்லா இருக்கியோ இல்லையோ ஐயா
ஒன்னால ஒசந்து இருக்கேன் மெய்யா
ஒரு வார்த்தையும் சொல்லல நான் பொய்யா
எப்பவுமே என் குருவே நீதானய்யா.
#ஆசிரியரை_மதிக்காத_நாடு_உருப்படாது.
#அனைத்துஆசிரியர்களுக்கும்_ஆசிரியர்தின_நல்வாழ்த்துகள்


சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்-632515.

10 comments:

  1. அழகான வரிகள்,ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அய்யா

    ReplyDelete
  2. அனைத்து ஆசிரியர்களுக்கும்

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அனைத்து ஆசிரியர்களுக்கும்

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. TODAY IS TEACHERS DAY CONGRATULATIONS TO ALL TRS THE MOST POWERFUL OF YOUR SACRIFICE AND SERVICE THANK YOU BY BATRIC

    ReplyDelete
  6. Congratulations wish u happy teachers day

    ReplyDelete
  7. கவிதை நல்லா இருந்திச்சி அப்பு!

    ReplyDelete
  8. வாசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி நல்லுள்ளங்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி