நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா தற்கொலை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2017

நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா தற்கொலை!


உச்ச நீதிமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



நாடு முழுவதும் மருத்துவக் கல்வி சேர்க்கையானது இனி 'நீட்' தேர்வு மூலமாகத்தான் நடைபெறுமென்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மாநில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு என்று 85% சிறப்பு இட இதுக்கீடு அளித்து  அரசாணை வெளியிட்டது.

ஆனால் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அத்துடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவினை மத்திய அரசு அனுமதியுடன் நிறைவேற்றவும் தமிழக அரசு முயன்று வந்தது.  

அதே நேரத்தில் 'நீட்'  தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் குழுமூர் என்ற கிராமத்தினைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தன்னை எதிர் மனுதாரராக சேர்த்துக் கொண்டார். அங்கு நீட் தேர்வுக்கு எதிராக மாநில மாணவர்களின் தரப்பினை முன்வைத்து வாதாடினார்.

ஆனால் தமிழக அரசின் வழக்கும், அனிதா தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையானது நீட் அடிப்படையில் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவி அனிதா குழுமூரில் உள்ள தனது இல்லத்தில் இன்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயினை இழந்து விட்ட அனிதாவின் தந்தை மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி ஆவார். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான அனிதா +2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அத்துடன் மருத்துவ சேர்க்கைக்கான 'கட் ஆப்பாக' 196.75 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நிறைவேற்ற, உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய ஒரு  ஏழை மாணவியின்      வாழ்வானது, ஒரு தூக்கு கயிறில் முடிந்து போன சோகம் நிகழ்ந்துள்ளது.

47 comments:

  1. தங்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்லமை கொண்ட இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.,

    ReplyDelete
  2. தங்கள் ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு கையொப்பமிடும் இந்த அரசால் இன்னும் எத்தனை உயிர் போகுமோ?

    ReplyDelete
  3. saniyan puditha mathya and malia arasugal veliyera vendum.

    ReplyDelete
  4. Government is running poolish people

    ReplyDelete
  5. Irakkamatra aatchiyalarkalukku ithuvellam sakasam

    ReplyDelete
  6. Irakkamatra aatchiyalarkalukku ithuvellam sakasam

    ReplyDelete
  7. பன்னிரெண்டு ஆண்டுகள் கனவு காற்றில் கலந்து விட்டது......அந்த மாணவியின் மதிப்பெண் பெற கடின உழைப்பையும், மருத்துவ கனவுகளும் தான்...
    ஒரு ஆசிரியராக என் கண்ணீர் துளிகள் சமர்ப்பிக்கிறேன்....
    உள்ளம் எரிகிறது ஏனென்றால்?????????????????????????

    ReplyDelete
  8. மானம் கெட்ட எந்த ஊடகமும் இதை பெரிதாக காட்டாது ops, Eps இணைப்புதான் தற்பொழுது அவர்களுக்கு முக்கியம்

    ReplyDelete
    Replies
    1. நிஜமாகவே நீங்கள் ராஜா தான்....

      Superb.......

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  9. தங்கள் ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு கையொப்பமிடும் இந்த அரசால் இன்னும் எத்தனை உயிர் போகுமோ?

    ReplyDelete
  10. தங்கள் ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு கையொப்பமிடும் இந்த அரசால் இன்னும் எத்தனை உயிர் போகுமோ?

    ReplyDelete
  11. ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  12. ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  13. Pinam thinnum naaigalin aatchiyil innum ethanai uyir Pali irukkumo.. Samugam vegundela vediya tharunam ithu..

    ReplyDelete
  14. Pinam thinnum naaigalin aatchiyil innum ethanai uyir Pali irukkumo.. Samugam vegundela vediya tharunam ithu..

    ReplyDelete
  15. Un aathama Santhiyadayakoodathu papa pazhi vangu

    ReplyDelete
  16. நுழைவுத் தேர்வு அவசியம் என நீதிமன்றம் கருதினால் பொதுத்தேர்வை ரத்து செய்ய அரசிற்கு பரிந்துரை செய்யுங்கள் நீதியரசர்களே...
    பல ஆசிரியர்கள் உழைப்பு, மாணவியின் உயர்ந்த நோக்கம், பெற்றோரின் கனவு எல்லாம் வீணாக்கப்பட்டுள்ளது...
    அனைத்திற்கும் முழுப் பொறுப்பு நீதிமன்றமும், அரசாங்கம் மட்டுமே...

    ReplyDelete
  17. நுழைவுத் தேர்வு அவசியம் என நீதிமன்றம் கருதினால் பொதுத்தேர்வை ரத்து செய்ய அரசிற்கு பரிந்துரை செய்யுங்கள் நீதியரசர்களே...
    பல ஆசிரியர்கள் உழைப்பு, மாணவியின் உயர்ந்த நோக்கம், பெற்றோரின் கனவு எல்லாம் வீணாக்கப்பட்டுள்ளது...
    அனைத்திற்கும் முழுப் பொறுப்பு நீதிமன்றமும், அரசாங்கம் மட்டுமே...

    ReplyDelete
  18. valkai yanbathu porattamanathu than.....atharkku tharkollai mudivalla....valkaiel sathikka yavalavo irukum bothu entha mathiri seithigal satru varutham tharukirathu...

    ReplyDelete
    Replies
    1. ஏழ்மையிலும் இவ்வளவு மதிப்பெண் எடுத்த அந்த குழந்தையின் வலி எவ்வளவாக இருக்கும் நாம் வேலைக்காக எழுதும் தேர்வில் தோல்வி கண்டாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை மருத்துவர் என்பது அவள் உயிர் NEET ENTRANCE FEES RS 700 இது மத்திய அரசின் கோமாலி கொள்கை அதற்கு கையொப்பமிட்ட நமது முட்டால் திருடர்களின் திருட்டுதான் NEET நம்பவைத்து கழுத்தை அருத்துவிட்டார்கள்

      Delete
  19. மிகவும் வருத்ததிற்கு உரிய விசயம்....ஒவ்வொரு இடமும் நீட் தேர்விற்கு பயிற்சியில் சேர அதிகபட்சமாக 90000 அதனுள் Gst 18%... கேட்டால் அப்படி கொடுத்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும் என சொல்கிறார்கள்... இவ்வாறு பயிற்சி பெற பணம் மட்டுமே போதும் !!!! பணம் மட்டுமே இவ்வுலகில் எல்லாமே சாதிக்கிறது!!! அனிதா போன்ற பல்வேறு மாணவ மாணவியரின் வாழ்க்கையில் அரசாங்கம் விளையாடுகிறது... பாடத்திட்டத்தை தரமாக மாற்றுங்கள் !!! மாணவர்களின் மனநிலையை அறிந்து அதற்கான வழியை காட்டுங்கள் !!!

    ReplyDelete
  20. Ethaiyum ethirthu nintru poraduvathil thaan Vetri erukurathu, maranam atharku thervalla.
    Miguntha manavethanai alikurathu...un anma santhiyadaiyatum

    ReplyDelete
  21. 1176 மதிப்பெண் எடுத்த இவருக்கு NEET ல் தேர்வு பெறுவது பெரிய விசயமில்லை.மாணவர்களுக்கு ஆசிரியர்களாகிய நாம்தான் நம்பிக்கையூட்ட வேண்டும்.

    அரசியல்வாதிகள் செய்த மாபெரும் தவறு மாணவர்களுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.அதற்கேற்றார் போல மாணவர்கள் தயாரிகாயிருப்பார்கள்.சுயநலத்திற்காக எடுத்தேன் கவிழ்த்தேன் என NEET ஐ அறிவித்துவிட்டார்கள்.இது முட்டாள்தனமானது.

    மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் நம்பிக்கையூட்ட வேண்டும்.1176 எடுத்தவருக்கு Neet ல் தேர்ச்சி பெற முடியும்.25 வயதுவரை NEET எழுதலாம்.பல வாய்ப்புகள் உண்டு.வேலை செய்து கொண்டே கூட தேர்ச்சி பெறலாம்.
    NEET ஆல் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபடுகிறார்கள் என தவறான முன்னுதாரனத்தையை அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்காதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மாநில பாடதிட்டத்தில் படித்தவர்கள் எவ்வாறு மத்திய பாடதிட்டத்யை எழுத முடியும்

      Delete
    2. 3 வாய்ப்புகள் NEET ல் உண்டு

      Delete
    3. இந்த ஆண்டு Neet ல் 37% CBSE மாணவர்கள்தான் தேர்வாகியுள்ளார்கள்.மீதி அனைத்தும் மாநில பாடத்திட்டம்தான்.

      முறையான பயிற்சி மற்றும் பாடதிட்டத்தை தரம் உயர்த்தினால் எளிதாக முடியும்.10 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றபடவில்லை.

      Delete
    4. பணம் பத்தும் செய்யும் ...அதை புரிந்து பேசுங்கள்!!!

      Delete
  22. IAS தேர்வில் அகில இந்திய அளவில் கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் தேர்வாகும் போது,

    தமிழக அளவில் 85% தமிழக ஒதுக்கீட்டீல் அவர்களால் தேர்வு பெற முடியும்.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்புகள் இருக்கலாம் பயிற்சி யார் வழங்குவது

      Delete
    2. ஆசிரியர் பயிற்சி வழங்கலாம் என்று கூறினாலூம் பாடம் எப்பொழுது கற்பிப்பது? எத்தனை ஆசிரியர்கள் பயிற்சி வழங்க தயாராய் உள்ளார்கள்?

      Delete
  23. இந்த அரசு
    இறந்த பிறகு அளிக்கும்
    உதவித் தொகையும்,
    அறுதலும்
    எந்த உயிரையும்
    இழக்காமல்
    இருப்பதற்கு
    முன்னெச்சரிக்கை
    நடவடிக்கை ஐநோக்கி

    இருந்தால்
    அவருடைய
    இழப்புக்கு செலுத்தும் மரியாதையாகும்.

    ReplyDelete
  24. பாடத்திட்டத்தை அகில இந்திய அளவில் மாற்றும் வரை மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி மையத்தை HOSTEL வசதியுடன் க இலவசமாக மாநில அரசு உடனடியாக உருவாக்கி மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும்.அரசை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
  25. ஆசிரியர் நினைத்தால் கண்டிப்பாக அவர்களை NEET க்கு தயார்படுத்த முடியும்.

    COACHING CENTRE போய்தான் தேர்வு பெற முடியும் என தவறான எண்ணத்தை வளர்க்க கூடாது.

    தரமான ஆசிரியர்கள் இருந்தால் இது முடியும்.

    எப்படியாகினும் 2017 மற்றும் 2018 மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.2 வருட அவகாசம் கொடுத்தால் அவர்கள் தயாராகி விடுகிறார்கள்.


    ஆனால் 2011 ல் இருந்தே NEET வருவதற்கான அறிகுறிகள் இருந்திருக்கிறது.அரசு பாடத்திட்டதை மாற்றியிருக்கலாம்

    ReplyDelete
  26. The Present unqualified government busy in horse trading, joining them by foolshing the tamilnadu people and fighting for their seat that's all, they don't care about poor background students ambition

    If Amma would have been now that is different.

    Please EPS and OPS go home. Cheeters.

    ReplyDelete
  27. *12 ம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வாராததால் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவிகளின் செயலுக்கு யார் பொறுப்பு?*

    *12 ம் வகுப்பில் பெயில் ஆனதால் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு யார் பொறுப்பு?*

    *தன்னம்பிக்கையை உருவாக்காத கல்வித் திட்டம்தானே?*

    ReplyDelete
  28. இது 2017 ஆண்டின் தகவல்..!!!

    வெறும் 700 சீட் AIIMS கு 364,242 போட்டி

    வெறும் 150 சீட் jipmer க்கு 137,435 போட்டி

    வெறும் 52715 MBBS சீட் 12,00,000 போட்டி

    அப்ப சீட் கிடைக்காத எல்லோரும் என்ன செய்யலாம்...???

    ReplyDelete
  29. Iniyavathu oru thelivana mudivuku vaangada arasiyal saakkada pannihala...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி