இலவச 'லேப்-டாப்' இந்த ஆண்டும் இல்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2017

இலவச 'லேப்-டாப்' இந்த ஆண்டும் இல்லை!

அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, 2011 முதல், லேப் - டாப்களை, அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதுவரை,40 லட்சம் பேருக்குவழங்கப்பட்டுள்ளன.
2016 - 17 கல்வியாண்டில், லேப் - டாப் கொள்முதலுக்கு, 'டெண்டர்' விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால், கடந்த ஆண்டு மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது, இந்த கல்வியாண்டிலும், அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறைஅதிகாரிகள் கூறியதாவது:கடந்த கல்வியாண்டுக்கான லேப் - டாப்கள்,இப்போது தான் வரதுவங்கியுள்ளன.

அவற்றைகொடுத்து முடிப்பதற்கே, பல மாதம் ஆகிவிடும். வழக்கமாக, லேப் - டாப் கொள்முதல்செய்வதற்கு முன், தகவல் தொழில்நுட்ப துறையில்,அது தொடர்பாக அரசாணைவெளியிடப்படும். அதன்பின், பல மாதங்கள் கழித்து, கொள்முதல் துவங்கும்.
இந்த ஆண்டுக்கான அரசாணை, இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால், இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களும், காத்திருக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி