வருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2017

வருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை

'பெற்றோரின் வருமான சான்றிதழ் கேட்க கூடாது' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்புமற்றும் பிளஸ் 1 மாணவர் விபரத்தை, அந்த பள்ளிகள், சி.பி.எஸ்.இ., தலைமையகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கு அனுமதி வழங்கப்படும்.

இதற்காக, பல பள்ளிகள், மாணவர்களின் பெற்றோரிடம், வருமான வரி ரிட்டன் சான்றிதழ் அல்லது வருமான சான்றிதழ் கேட்பதாக, மாணவர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.இதையடுத்து, 'மாணவர் விபரங்களை பதிவு செய்ய, பெற்றோரிடம் வருமான வரித்துறை சான்றிதழோ, வருமான சான்றிதழோ கேட்கக் கூடாது. மாறாக, சுய கையெழுத்திட்ட கடிதம் பெற்றால் போதும்' என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி