ஜாக்டோ - ஜியோ அழைப்பை ஏற்று நீதித்துறை ஊழியர் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2017

ஜாக்டோ - ஜியோ அழைப்பை ஏற்று நீதித்துறை ஊழியர் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தம்

ஜாக்டோ - ஜியோ விடுத்துள்ள அழைப்பை ஏற்று, இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டது.
ஈரோட்டில் தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர், வேலைநிறுத்தப் போராட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். இதையடுத்து, கூட்டுக்குழுவுக்கு புதிய ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் தலைமையில் ஒரு பிரிவினர் மறியல், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சங்கங்கள் குழப்பம்

ஜாக்டோ - ஜியோ அமைப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், எந்த குழுவில் சேர்வது என்ற குழப்பம் அரசு ஊழியர்களின் பல்வேறு துறை சங்கங்களிடையே ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில அளவிலான அவசர ஆலோசனைக் கூட்டம்,மாநில தலைவர் கருணாகரன் தலைமையில் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்ட முடிவில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில அளவிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, நீதித்துறை ஊழியர் சங்கமும், மாநில அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது. இன்று (11-ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், 12-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல், 13-ம் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி