தொடர்ச்சியாக ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வோர் கவனத்துக்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2017

தொடர்ச்சியாக ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வோர் கவனத்துக்கு...


தினமும் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வதால் என்ன ஆகும்? 2015 ஆம் ஆண்டில் எடுக்கப் பட்ட ஒரு மருத்துவ சர்வே முடிவின் படி 52% பேர், நோய்களைத் தடுக்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

84% பேர் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆஸ்பிரினை எதற்காக எடுத்துக் கொள்வதானாலும் அதற்கும் ஒரு வரமுறை உண்டு. அதைவிடுத்து தொடர்ச்சியாக ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டீர்களானால் மற்ற அனைத்து மருந்துப் பொருட்களையும் போல ஆஸ்பிரினும் உடல் ஆரோக்க்யத்தில் குறிப்பிடத்தக்க அளவில் கெடுபலன்களை உண்டாக்கக் கூடியதே என்று என்று அந்த சர்வே முடிவு தெரிவிக்கிறது. தினமும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தால் என்னென்ன விதமான விளைவுகள் ஏற்படும் என்பதையும் அதே சர்வே முடிவு பட்டியலிட்டுள்ளது. அதன்படி;

ஒவ்வாமை
வயிற்றுக்குள் ரத்தக்கசிவு
குடற்பகுதியில் திடீரென ரத்தக் கசிவு
வலிப்பு நோய்
மூளையில் ரத்தக்கசிவு 
உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படக் கூடும். 

அதனால் மருத்துவரின் தகுந்த ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே மேற்கண்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, மருத்துவர் ஆலோசனை இன்றி வழக்கமாக காய்ச்சல், தலைவலி, உடல்வலிக்கு நாம் எடுத்துக் கொள்ளும் பாராசிட்டமால், ஜெலூசில், சாரிடான், குரோசின் மாத்திரைகளைப் போல ஆஸ்பிரினையும் மருத்துவர் ஆலோசனைகள் இன்று அடிக்கடி எடுத்துக்கொள்வடு உயிராபத்தில் கொண்டு நிறுத்தலாம். ஆஸ்பிரின் மாத்திரமல்ல மேற்கண்ட பிற மாத்திரைகளையும் கூட அடிக்கடி எடுத்துக் கொள்வது ஆபத்தானதே! மருந்து, மாத்திரைகளைப் பொறுத்தவரை மருத்துவர் ஆலோசனையோ, பரிந்துரையோ இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் முயற்சி செய்வது தவறு. அதை விட வீட்டு வைத்தியமாகவோ அல்லது பாட்டி வைத்தியமாகவோ பாரம்பரியமாகப் பின்பற்றி நற்பலன் தந்து கொண்டிருக்கும் முறைகள் எதையாவது முயற்சி செய்யலாம். அதாவது இம்மாதிரியான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கையில் மருத்துவ ஆலோசனை பெற வகையில்லாத போதிலாவது!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி