அங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் பள்ளிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2017

அங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் பள்ளிகள்

அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அரசு உத்தரவை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அடிப்படை வசதியற்ற நிலையில் மழலையர்
பள்ளிகள் செயல்படும் நிலை நீடிக்கிறது.
தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், துவக்க நிலை அங்கீகாரம் பெறுவதோடு, மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை தொடர் அங்கீகாரமும் பெற வேண்டும்.
நிறுத்தி வைப்புபோதிய உள்கட்டமைப்பு வசதியில்லாத பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி, கடந்த, 2015ல், மழலையர் பள்ளிகளும்
அங்கீகாரம் பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.ஆனால், மழலையர் பள்ளி துவக்கப்படுவது, சமீப காலமாக அதிகரித்து உள்ளது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் வண்ண படங்கள் வரைந்து, 'ப்ளே ஸ்கூல்' பள்ளியாக மாற்றி விடுகின்றனர்.இப்பள்ளிகள் நடத்தப்படுவது குறித்து, தொடக்கக்கல்வித்துறைக்கு தகவல் கூட தெரிவிப்பதில்லை.
யு.கே.ஜி., வரையிலான வகுப்புகள் மட்டுமே இப்பள்ளிகளில் நடத்தப்படுவதால், பெற்றோரும் அங்கீகாரம் குறித்து கேள்வி கேட்பதில்லை.
அலட்சியம்இது குறித்து, தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில், அங்கீகாரம் பெறாதவற்றை மூடுவதற்கே, பல்வேறு தடைகள் வருகின்றன.

நீதிமன்ற ஆணை, அரசியல் தலையீடு உள்ளிட்டவற்றை துணையாக கொண்டு, ஏராளமான எண்ணிக்கையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது. இதனால், அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கவோ, அவற்றை பெறவோ பள்ளிகளும்
அக்கறை காட்டுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி