அசல் ஓட்டுனர் உரிமம் ; நீதிபதி புதிய சலுகை :பொதுமக்கள் மகிழ்ச்சி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2017

அசல் ஓட்டுனர் உரிமம் ; நீதிபதி புதிய சலுகை :பொதுமக்கள் மகிழ்ச்சி?

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, விதிமுறை மீறுகிறவர்களிடம் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என தமிழக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. ஆனால், வாடகை வாகனத்தை ஓட்டுபவர்கள் தங்கள் அசல் உரிமத்தை தங்கள் முதலாளிகளிடம் கொடுத்து வைத்திருப்பது வழக்கம். அதேபோல் அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்து விட்டால், புதிய உரிமம் பெறுவதில் தாமதம் ஆக வாய்ப்பிருப்பதால் இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒரு வழக்கு சென்னைஉயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதில், இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி " அசல் ஓட்டுனர் உரிமத்தை மறந்து விட்டு வருபவர்களுக்கு அபராதம் மட்டுமே போதுமானது.

ஏனெனில், மறதியை குற்றமாக கருத முடியாது. ஆனால், அசல் ஓட்டுனர் உரிமமே இல்லாதவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை கட்டாயம். நகல் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு எப்படி வெளிநாடு செல்ல முடியதோ, அது போலத்தான் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டக் கூடாது. இதனால் ஏற்படும் இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்" என நீதிபதி தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி