முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு: புதுச்சேரியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு: புதுச்சேரியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

புதுச்சேரி முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்தது தொடர்பாக அதிகாரிகளின் வீடுகளில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் முக்கிய அதிகாரிகள் சிக்குகின்றனர்.
புதுச்சேரியில் முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை முதல் முறையாக சென்டாக் மூலம் இந்தாண்டு நிரப்பப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் கிரண்பேடி சிபிஐக்கு பரிந்துரை செய்தார்.அதன்பேரில் கடந்த ஜூன் 27-ம் தேதி சென்னையில் இருந்து 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு காலாப்பட்டு அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது. அப்போது மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பானமுக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் குழு சென்டாக் முறைகேடு தொடர்பாக புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குநர் வீட்டில் சோதனை நடத்தினர். மற்றொரு குழுவினர் மற்ற சென்டாக் அதிகாரிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மேலும், புதுச்சேரியில் உள்ள சில தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் சென்று அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

காலையில் தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது.இந்த சோதனையைத் தொடர்ந்து, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை உயரதிகாரிகள் மற்றும் சென்டாக் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி