ஃபேஸ்புக், வாட்ஸ் அப்-க்கு தடை கோரிய மனு: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2017

ஃபேஸ்புக், வாட்ஸ் அப்-க்கு தடை கோரிய மனு: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடைக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வி.டி.மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைத்தளங்கள், இணையவழி தொலைபேசி சேவைகளை வழங்கி வருகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் சங்கேத குறியீடுகள், விசாரணை அமைப்புகளால் கண்டுபிடிக்க முடியாதவாறு உள்ளன. இவற்றை பயங்கரவாதிகள் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்து வருகிறார்கள்.

எனவே, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றின் தொலைபேசி அழைப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், அரசுக்கு இழப்பு ஏற்படும். இவற்றை ஒழுங்குபடுத்துவது பற்றி முடிவு எடுக்கும்வரை, மேற்கண்ட 2 வலைத்தளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த மனு, தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 17ம் தேதிக்குக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி