புதிய வரைவு பாட திட்டம் நவம்பரில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2017

புதிய வரைவு பாட திட்டம் நவம்பரில் வெளியீடு

'பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த, ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, கல்வியாளர்கள் அடங்கிய பாடத்திட்ட குழுவும், பள்ளி கல்வி அமைச்சர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள, பள்ளி கல்வி துறை செயலர், உதயசந்திரன் உள்ளிட்ட எவரையும் நீக்கக் கூடாது' என, கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், 'குழு உறுப்பினர்களில் மாற்றம் கூடாது' என, உத்தரவிட்டிருந்தார். இவ்வழக்கு, நீதிபதி கிருபாகரன்முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயசந்திரன் நீக்கப்பட்டு, புதிய செயலர் நியமிக்கப்பட்டிருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரியை மாற்றியது குறித்து, நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர், 'அதிகாரி உதயசந்திரனை நீக்கவில்லை; முதன்மை செயலராக, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்' என்றார். புதிய பாடத்திட்ட பணிகள் நடப்பதாகவும், புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு, நவம்பரில், வெளியிடப்பட உள்ளதாகவும், அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து, 'உதயசந்திரன் நீக்கம் இல்லை' என்பதை, மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, அக்., 5க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி