வாகனம் ஓட்டும்ேபாது செல்போனில் பேசினால் போலீசில் புகார் அளிக்க இலவச தொலைபேசி: அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2017

வாகனம் ஓட்டும்ேபாது செல்போனில் பேசினால் போலீசில் புகார் அளிக்க இலவச தொலைபேசி: அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை

செல்ேபான் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி வசதியை ஏற்படுத்தலாமே என ஐகோர்ட் கிளை பரிந்துரைத்துள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘போக்குவரத்து விதிகளை மீறி டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்குபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கவும், லைசென்சை ரத்து செய்யவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் ஆர்டிஓக்களுக்கும், போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு தலைமை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்,’’ என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம், 3 மாதத்திற்கு லைசென்சை நிறுத்திவைப்பதுடன், இதுதொடர்பாக புகார் அளிக்க தனியாக கட்டணமில்லா தொலைபேசி வசதியை ஏற்படுத்தலாமே’ எனக்கூறிய நீதிபதிகள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் குறித்து டிஜிபி, உள்துறை செயலர் மற்றும் போக்குவரத்து துறை செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப். 18க்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி