Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

CPS ஓய்வூதியத்தால் இழக்கப் போவது என்ன?

ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளர் நிலையில் பணிபுரியும் உங்கள் தோழன்
அ.இராஜா ஆகிய நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவது


சென்ற வாரம் 2016-17 ம் ஆண்டிற்கான CPS Statement ஐ இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தகவல் வந்தது...

2012 முதல் பணியில் இருந்தாலும் 2015 முதல் நானும் அந்த  CPS திட்டத்தில் உள்ள ஒருவன் என்பதால்

ஆவலுடன் எனது CPS கணக்கில் உள்ள இருப்பை பதிவிறக்கம் செய்தேன்

ரூ.55648/-ம் ஒரு சில
Missing Credit ம் இருந்தது....
எனக்கு மிகுந்த வருத்தம்.

2007 முதல் பணியில் உள்ள நண்பர் ஒருவர் தனது CPS கணக்கில் உள்ள இருப்பை பதிவிறக்கம் செய்தார்

ரூ.665487/- இருந்தது....
நண்பருக்கு கொஞ்சம் சந்தோஷம்....

இருவருக்கும் இன்னும் 25 வருடம் பணிக்காலம் உள்ளது ...

மீதமுள்ள பணிக்காலத்திற்கும் தோராயமாக கணக்கீடு செய்ததில்

2042 ல் ஓய்வு பெறும் போது எனக்கு ரூ.41 இலட்சம் முதல் 45 இலட்சம் வரையும் (அடேங்கப்பா)
(22 1/2 இலட்சம் என்னுடையது 22 1/2 இலட்சம் அரசாங்கம் குடுத்தது)

நண்பருக்கு ரூ.60 இலட்சம் வரையும் (அடடேங்கப்பா)
(30 இலட்சம் நண்பரோடது
30 இலட்சம் அரசாங்கத்தோடது) கிடைக்க வாய்ப்பிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தது.

இதில் நான் ஓய்வு பெறும்போது
40%( ₹18 இலட்சம்) குடுப்போம் 60%(₹27 இலட்சம்) சேர் மார்க்கெட்ல போடுவோம் னு சொல்ராங்க
(இல்லனா vice versa கூட வச்சிக்கோங்க 60% 40%)
பிரச்சன அது இல்லீங்க.

அப்படியே ஒரு ப்ளாஷ் பேக் போவமா...

1992 ல மாத தவணையில ஒரு பாலிசி போட்டா 25 வருசம் கழிச்சு ரூ.125000/- கிடைக்கும்னு சொன்னாங்கனு எங்கப்பா திரு.அழகேசன் அவர்கள் நம்பி ஒரு பாலிசி போட்டாரு.

2017 பாலிசி முடிஞ்சுது
₹125000/- பணமும் வந்துடுச்சு
இதுவும் பிரச்சன இல்லிங்க....

(அப்பறம் என்னடா உன் பிரச்சனைனு கேக்குறீங்க)

ஓகே....
சொல்றேன் கேளுங்க

25 வருசத்துக்கு முன்னாடி எங்கப்பா நினைச்ச ரூ.125000/- இது இல்லங்க....
(என்னாது கிணத்த காணுமா)

ஆமாங்க

அன்னக்கி இந்த பணத்த வச்சி 10 ஏக்கர் (1000 சென்ட்) நிலம் வாங்கலாம்ங்க....

இன்னக்கி அதே பணத்த வச்சி 1 சென்ட் (435.6 சதுர அடி) இடம் கூட நம்மாள வாங்க முடியாதுங்க....

அதே மாதிரிதாங்க..

இன்னைக்கு நிலமைக்கு
நான் ஓய்வு பெறும்போது கிடைக்க போற ரூ.45 இலட்சம் பெரிய விசயமுங்க

ஆன உலகம் வளர்ந்துக்கிட்டு இருக்க வேகத்துல 2042 ல இதே ரூ.45 இலட்சம் துக்கடா காசுங்க.

அதுலயும் பாதிதாங்க
₹2250000/-என் கைக்கு கிடைக்கும்

அதையும்
வழிமேல் விழி வைத்து காத்துக்கிடந்த
என் புள்ளைங்களும்
என் கூட பொறந்த உறவுகளும் கரெக்டா வந்து புடுங்கிடுவாங்க...
... (அது என் பர்சனல் மேட்டரு  விடுங்க)....

மீதி ₹22 1/2 இலட்சம் சேர் மார்க்கெட்ல

12% வட்டினே வைங்க  (அன்னைக்கு நாடு வளந்துரும்)

[(2250000*12)/100] /12
= ₹22500/- ம் மாத ஓய்வூதியம்
(Banking Calculation னுங்க)

2017 இன்னைக்கு ஒரு தின கூலியின் மாத வருமானம் சராசரியாக
(₹600*26 நாட்கள் ) = ₹15600/-

2042 ல் ஒரு தின கூலியின் மாத வருமானம் சராசரியாக  (₹1950*26 நாட்கள்) = ₹50700/-
(3.25. % வளர்ச்சியில்)
ஆனா Govt 9% சொல்லுதுங்க

ஆனால் 30 வருடம் அரசுப்பணி செய்த எனக்கு ஓய்வூதியம் ₹22500/- (அதும் வரும் ஆனா வராது கதை தான்,
ஏன்னா சேர் மார்கெட்)

அன்னைக்கு இதே அரசாங்கம் சொல்லும்

அதுக்கு நாங்க என்ன பண்றது நாங்கதான் அரசு பங்களிப்பா 10%(Government Contribution) அப்பவே கொடுத்துட்டமேனு....

அப்போ
நடுத்தெருவுல நாயா நிக்கப்போறது நான் தானுங்க....

இதே பழைய ஓய்வூதிய திட்டமா இருந்தா

நான் சேமிச்ச ₹22 1/2 இலட்சமும் எனக்கு  கிடைச்சிருக்கும்
(இப்பவும் இதை
என் புள்ளைங்களும்
என் கூட பொறந்த உறவுகளும் கரெக்டா வந்து புடுங்கிடுவாங்க...  That's my personal problem)

ஆனாலும் என் வாழ்வாதாரத்திற்கு பிரச்சனையில்லை

ஆமாம்

ஏனென்றால்
ஓய்வு பெறும்போது நான் பதவி உயர்வில் குறைந்த பட்சம் என் துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் இருப்பேன்

2042 ல் எனது ஊதியம் கண்டிப்பாக ₹220000/-
(இப்ப இல்ல பாஸூ 2042 துல)

பழைய ஓய்வூதிய திட்டப்படி
30 வருடம் பணிபுரிந்த நபருக்கு கடைசியாக பெற்ற ஊதியத்தில் பாதி (50%) ஓய்வூதியம்

இப்ப சொல்லுங்க பார்க்கலாம் எனக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்னு

கரெக்ட் ₹110000/-

இது தாங்க மனு தர்மம்

மாறுகின்ற இந்த அரசாங்கம் நற்பெயர் எடுக்க
மாறாமல் கசக்கி பிழியப்பட்டு சக்கையாக்கப்பட்ட அரசு ஊழியனுக்கு

அவனது ஓய்வு காலத்தையாவது நலமாக கழிக்க ஒரு நல்ல அரசு கொடுக்க வேண்டியது ஓய்வூதியமே
ஓய்வூதியமே
ஓய்வூதியமே

OPS ல் கிடைக்கபோவது ₹110000/-
CPS ல் கிடைக்கபோவது
₹ 22500/-
( அதுவும் நிலையற்றது)

அதனாலதான் 07/09/2017
 08/09/2017 போராட்டத்துல முதல் ஆளா கலந்துகிட்டேன்

இதோ 11/09/2017 இன்று  மாவட்ட ஆட்சியர் வளாகத்துல நடக்கப்போற போராட்டத்துக்கும் முதல் ஆளா கலந்துக்குவேன்.....

அப்போ நீங்க?

இவண்:
அன்பு தோழன் அ.இராஜா
கணக்கர்(பொது)
ஊ.ஒன்றியம்
சின்னசேலம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives