மாணவர்கள் மீது அக்கறையே இல்லையா?- ஆசிரியர்களைக் கடிந்து கொண்ட நீதிபதி கிருபாகரன் (FULL UPDATE) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2017

மாணவர்கள் மீது அக்கறையே இல்லையா?- ஆசிரியர்களைக் கடிந்து கொண்ட நீதிபதி கிருபாகரன் (FULL UPDATE)


போராட்டம் நடத்தும் ஆசிரியர்களால் மாணவர் சமுதாயம்தான் பாதிக்கப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு உடனடியாக கவுன்சிலிங் மையத்தை அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை நாளை இன்னொரு வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதி கிருபாகரன் ஆசிரியர் போராட்டம் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

அப்போது நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். போராடும் ஆசிரியர்கள் மாணவர்கள் நிலை பற்றி கவலை கொள்வதில்லை என்று தெரிவித்தார்.

கல்வி முறையை தன் கைக்குள் வைத்திருப்பது ஆசிரியர்கள்தான்.. அவ்வாறு தன் கைகளில் கல்வி முறையை வைத்துள்ள ஆசிரியர்கள் நடத்தும் போராட்டங்களால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அரசுப்பள்ளிகளில் பயின்ற 5 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது என்பது ஆசிரியர்களுக்கு அவமானம் என்று தெரிவித்தார்.

நல்லாசிரியர்களும் பல பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் சாதாரண பள்ளியில்தான் படித்தேன் எனக்கு தங்கமான ஆசிரியர்கள் கிடைத்தார்கள். ஆனால் சங்கம் அமைத்து செயல்படும் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுபவர்களால் மாணவர்களுக்குத்தான் பாதிப்பு என்று கண்டனம் தெரிவித்தார்.

விருத்தாசலம் அருகே ஒரு ஊரில் ஆசிரியர் ஒருவர் மூன்று மாதம் பள்ளிக்கு விடுப்பு போட்டு சென்றுவிட்டார். இதனால் பிள்ளைகள் படிப்பு பாதிக்கப்பட்டதாக பள்ளியை இழுத்து மூடிய பெற்றோர் பின்னர் ஆசிரியரை திருப்பி அனுப்பியதையும், இதை பின்னர் கேள்விப்பட்ட அரசு அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ததையும் தனியார் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் சங்கத்தில் இருப்பவர்கள் தவறே செய்யவில்லை என்று கூற முடியுமா? பொது நல நோக்கோடு நாங்கள் கருத்து தெரிவிக்கும் போது அதையும் வெளியில் விமர்சிக்கிறார்கள், அது நீதிமன்ற அவமதிப்பாகும். அவ்வாறு செயல்படுபவர்கள் மீண்டும் நீதிமன்றத்தைத்தான் நாடி வரும் நிலை ஏற்படும்.

சங்கம் அமைத்து தலைவர்களாக இருப்பபவர்கள் தங்களுக்கு உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். மருத்துவம், காவல் துறை, கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.

போராட்டத்தை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள் நாளை ஆளுங்கட்சியாக வரும்போது அதை எதிர்ப்பார்கள். இதெல்லாம் அரசியல். போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் தொழிலாளர்களா? நல்ல சம்பளம் கிடைத்தும் இது போன்ற போராட்டங்களை நடத்துபவர்கள் மாணவர்கள் நலனைப் பற்றி கவலைப்படுவதில்லை. மயிலே மயிலே என்றால் இறகுகள் விழாது, அரசுதான் போராட்டத்தை ஒடுக்க வேண்டும்.

கல்வித்துறையை மேம்படுத்துவதில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. வரும் 18-ம் தேதி போராட்டம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதி கிருபாகரன் வழக்கை ஒத்திவைத்தார்.

42 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. CONSOLIDATED SALARY RS.7000-POTHUM. KUDUMBAM NADATHHI VIDALAM. AANNAAL MLA--VARUMAANAM ILLAMA IRUKKAANNGGA, AVANGA KOOVATHOORLA KOOOTTHADIKKA RS.105000-SAALARY KODUKKANUM? ITHELLAMM NEETHIYIN KANGALLUKKU THERIYALA? AMAICHARGAL KODI KODI YAAGA KOLLAI ADIKKA PANAM IRUKKU.. SALARY KODUKKA PANAM ILLAI.. ENGUM CONSOLIDATE PAY. WINE SHOP MEENDUM NEETHIYAI MEERI THIRAKKURAAN. KUDITHUVITTU OTTINAAL ACCIDENT AAGAATHAAM.. LICENSE ILLANNAA AAGUMAAM. EVVALAVU ANEETHIGALAI THANIYAAR TV-LA PAKKIROM? ITHELLAM NEETHI-YIN KANGALUKKU THERIYAVILLAI....

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மாணவர் மீது அக்கறை கொண்ட நீதிபதி அவர்களுக்கு நன்றி.
    ஆசிரியர் கோரிக்கையை அரசாங்கம் ஏற்கமால் அவர்கள் பள்ளி திரும்பி பாடம் நடத்தினாலும் மனநிறைவு இருக்குமா?
    குருவை அலட்சியம் செய்வது சரியாகுமா?

    ReplyDelete
  4. மாணவர் மீது அக்கறை கொண்ட நீதிபதி அவர்களுக்கு நன்றி.
    ஆசிரியர் கோரிக்கையை அரசாங்கம் ஏற்கமால் அவர்கள் பள்ளி திரும்பி பாடம் நடத்தினாலும் மனநிறைவு இருக்குமா?
    குருவை அலட்சியம் செய்வது சரியாகுமா?

    ReplyDelete
    Replies
    1. CONSOLIDATED SALARY RS.7000-POTHUM. KUDUUMBAM NADATHHI VIDALAM. AANNAAL MLA--VARUMAANAM ILLAMA IRUKKAANNGGA, AVANGA KOOVATHOORLA KOOOTTHADIKKA RS.105000-SAALARY KODUKKANUM? ITHELLAMM NEETHIYIN KANGALLUKKU THERIYALA?

      Delete
  5. மாற்றி மாற்றி குறை கூறுவதால் எந்த தீர்வும் வராது.
    முதலில்
    அரசு தன்னால் நடத்தப்படும்
    கல்வித்துறை ,
    சுகாதாரத் துறை,
    போக்குவரத்துத் துறை
    மற்றும்
    சேவைத்துறை
    போன்ற அனைத்து துறைகளிலும்,
    வேலை செய்யும்
    முதல் மந்திரியிலிருந்து(முதலமைச்சர் )
    MLA , MP ,IAS, IPS ,
    Clerk வரை அரசு சம்பளத்தை வாங்குகின்ற அனைவரும்
    அனைத்து
    தேவைகளை ,
    சலுகைகளை பெருவது போல
    அதில் (அரசுத் துறைகளில்)
    பங்கு கொண்டு
    (அரசு பள்ளியில் படிப்பது ,
    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெருவது,
    மற்றும் அரசு போக்குவரத்தை பயன்படுத்துவது)
    அதன்
    சிறப்பையும் ,பெருமையையும் மற்றவர்களுக்கு
    வெளிபடுத்தினார்களா?,

    ReplyDelete
  6. உண்மைதான்,
    அனைவரும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டவர்களே.
    முதலமைச்சர் உடல் நிலை சரியில்லாத போது அனைத்து MLA, MP மற்றும் IAS, IPS அதிகாரிகள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பிலும் உத்தரவிற்கும் காத்து இருந்தார்கள்.

    கூவத்தூரிலும், தற்பொழுது கர்நாடகாவிலும் தங்கி MLA , MP க்கள் சட்டத்திற்கு உட்பட்டு தங்கள் தொகுதி வேலைகளை விடுதியிலிருந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    சட்டத்திற்கு உட்பட்டு தான் 12th ல் மெட்ரிக்கில் படித்த மாணவர்களுக்கு, CBSC ல் நுழைவுத் தேர்வு நடத்தினர்கள் .

    ReplyDelete
  7. ஏன்டா இந்த கேள்வி எல்லாம் தான் கேட்கிறிங்க... ஆசிரியர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கல்வி பணியில் பணியாற்றுகிறோம்.. ஓய்வுக்கு பின்னர் எங்களின் வாழ்வாதாரத்திற்கு யார் பொறுப்பு...அதுக்கு தான் சம்பளம் வாங்குறியே அப்படினு கேப்ப...ஒய்வூதியம் பற்றி அடிப்படை அறிவு இல்லாத முட்டாள் கூட்டத்திற்கு....நாங்கள் வாங்கும் சம்பளத்தில் 10% அரசாங்கம் பிடித்து கொள்கிறது.இப்படி பிடிக்கப்பட்ட சுமார் 9000 கோடி பணம் இப்போ எங்கனு கேட்டா எந்த தா* மகனும் பதில் சொல்ல வில்லை.CPS திட்டத்தில் பணியில் சேர்ந்து செத்துப்போன எத்தனை பேர் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? 20,30 ஆண்டுகள் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒய்வூதியம் இல்லை.ஆனால் வெறும் 5 ஆண்டுகள் மட்டும் ஊரை அடித்து உளையில் போடும் அரசியல்வாதிகளுக்கு ஒய்வூதியம் உண்டு.இவர்களை கேள்விக்கேட்க திராணி இல்லை..ஊருக்க இளைத்தவன் வாத்தியார் அதனால்தான் எங்களை நக்கல் செய்கிறீர்கள்.நீட் தேர்வு பற்றி என்ன அடிப்படை அறிவு உங்களுக்கு உள்ளது..நீட் என்பது நவீன தீண்டாமை நம் பாடத்திட்டத்தை விட்டு CBSE பாசத்திட்டத்தில் கேள்வி கேட்டால் எப்படி மாணவர்கள் எதிர்கொள்வார்கள்.

    ReplyDelete
  8. நீதிபதி அவர்களே .. நீங்கள் என்ன புனித ஜார்ஜ் மன்னரா?
    ..................................
    ''ஐந்து மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்''
    '' அரசியல் ஆதாயத்துக்காகவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் செயல்படுகின்றன''
    எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டியதைப் புரிந்துகொள்ளாமல், ஏன் போராட்டம் நடத்துகின்றனர் '
    '' , 40 ஆயிரம், 50 ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்''
    '' கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது ''
    '' 'எனக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்''
    - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
    நீதிபதி கிருபாகரனின் இந்தக் கருத்துக்கள் அனைத்தும் கடும் கண்டனத்திற்கு உரியவை.
    அரசுப்பள்ள்ளியில் படித்த 1176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவக்கலூரியில் இடம் கிடைகாமல் அனிதா தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம் அரசுபள்ளி ஆசிரியர்களா? மாணவர்களுக்கு சம்ப்ந்தமில்லாத பாடதிட்டத்தில் தேர்வு நடத்தி அரசுப்பள்ளி மாணவர்களை வெளியேற்றிவிட்டு ஆசிரியர்களை குறை சொன்னால் என்ன அர்த்தம்?
    அரசியல் ஆதாயத்திற்காகவே எல்லாக் கட்சிகளும் செயல்படுகின்றன எனறு பொத்தம பொதுவாக அடித்த்தால் அரசியல் கட்சிகளின் போராடடங்களில் எந்த அர்த்தமும் இல்லையா? அரசியல் கட்சிகள்தான் மக்களை பிரதிநித்துவப்படுத்துகின்றனவே தவிர நீதிமன்றங்கள் இல்லை. மக்கள் மன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மட்டுமே நீதிபதிகளின் வேலை .
    40 ஆயிரம் 50 ஆயிரம் வாங்கும் அரசு ஊழியர்கள் தங்கள் சட்டபடியான உரிமைகளுக்காக போராட்டம் நடத்தக் கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கிறதா? எவ்வளவு சம்பளம் வாங்குறவர்கள் போராடலாம் என்று உச்சவரம்பு ஏதும் வைத்திருக்கிறீர்களா? தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்கும் சமூக ஆர்வலர்கள் பபேசுவதுபோல ஒரு நீதிபதி பேசலாமா?
    ’’ கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது ’’ என்பது உங்கள் தனிப்பட்ட ஆசையாக இருக்கலாம். அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்ப்டை உரிமைகளின் படி அந்த உரிமையை எந்த சமூகப்பிரிவினருக்கும் நீங்கள் மறுக்க இயலாது.
    நீதிபதிகளின் தீர்ப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்பதுதான் சட்டமே தவிர உங்கள் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்று சொல்ல சட்டத்தில் இடமில்லை. உங்களை விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குபாயும் என்றால் நீங்கள் என்னபுனித ஜார்ஜ் மன்னரா? MANYSYA PUTHRAN

    ReplyDelete
  9. Nethipathi iya avargale nenga 1st gpf venamnu sollitu cps ku vanga
    ungalukku vantha ratham mathavangalukku vantha thakkali satniya

    ReplyDelete
  10. Nethipathi iya avargale nenga 1st gpf venamnu sollitu cps ku vanga
    ungalukku vantha ratham mathavangalukku vantha thakkali satniya

    ReplyDelete
  11. நாட்டில் குற்றம் பெருக காரனம் நீதிபதிகள் தான் காரணமா?...உங்கலுக்கு தேவையானதை மட்டும் அரசுக்கு உத்தரவு போட்டு கேட்டு வாங்கும் போது சுகமாக இருக்கும்..இதையே ஆசிரியர் கேட்டா தவரா?

    ReplyDelete
  12. நாட்டில் குற்றம் பெருக காரனம் நீதிபதிகள் தான் காரணமா?...உங்கலுக்கு தேவையானதை மட்டும் அரசுக்கு உத்தரவு போட்டு கேட்டு வாங்கும் போது சுகமாக இருக்கும்..இதையே ஆசிரியர் கேட்டா தவரா?

    ReplyDelete
  13. Teachers na elichavayan...... Question panna kudathu.....vayamudi poganum....kalam kalama ippadithan iruka venduma enna? ....

    ReplyDelete
  14. Monthly expendichar evlo ogirathu.....intha salary vangi enna panna mudium.....kadaisile pitchaya edukirathu

    ReplyDelete
  15. ஒரு மனிதன் தன் இடத்தில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து பின்னர் அடுத்தவர் குறையை கூற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. correct,mr.kirubaharan avarkal tamilnadu governmentidam ketkavendiya kelvikalai poradum asiriyarkalidam mattum kuraikal koorivarukirar ithinal thaan courtil ivarkaludaya judgement anathu pending

      Delete
    2. neethiarsar pillagal entha schoolil paditharkalo govt asiriyarkalai mattum kurai solvatharku enna erukkirathu miga perriya mahankal intha govt schoolil padithavarkale 5 arsu palli manavarkalukku mattum mbbs edam kidaithathu ental ethu asiriyar kurraiyalla ennpathu mattum unnmai

      Delete
  16. காசு கொடுத்து நீதிபதியை விலைக்கு வாங்கியதாக தகவல்

    ReplyDelete
  17. உங்கள் சம்பளம் என்ன???

    ReplyDelete
  18. உண்மைதான்,
    அனைவரும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டவர்களே.
    முதலமைச்சர் உடல் நிலை சரியில்லாத போது அனைத்து MLA, MP மற்றும் IAS, IPS அதிகாரிகள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பிலும் உத்தரவிற்கும் காத்து இருந்தார்கள்.

    கூவத்தூரிலும், தற்பொழுது கர்நாடகாவிலும் தங்கி MLA , MP க்கள் சட்டத்திற்கு உட்பட்டு தங்கள் தொகுதி வேலைகளை விடுதியிலிருந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    சட்டத்திற்கு உட்பட்டு தான் 12th ல் மெட்ரிக்கில் படித்த மாணவர்களுக்கு, CBSC ல் நுழைவுத் தேர்வு நடத்தினர்கள் .

    ReplyDelete
  19. Honorable Justice please think a while before passing statement in the court against the teachers, their protest is very geniune because they are really facing the financial problem.

    ReplyDelete
  20. Thalaiva, where are you these days!!!!
    Your Questions are very good, very soon Government of Tamilnadu may celebrate your excellency along with cash award.

    ReplyDelete
  21. இப்படி ஒரு கண்டனமா????

    என்ன???? நல்ல சம்பளமா???

    என்ன??? உங்களுக்கு கிடைத்த ஆசிரியர் நல்லவரா?????

    என்ன??? ஆசிரியர்கள் போராடக்கூடாதா????

    ஆர்பாட்டத்தின் அடிப்படை தன்மையே புரிந்துகொள்ளாத நீதியரசர்.....

    ReplyDelete
  22. அட அறிவாளி நீதிபதிக்கு
    நீட் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி இருந்தால் அனிதாவின் மரணத்தை தடுத்திருக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
    நீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததா என கேள்வி எழுப்பிய நீதிபதி, க்கு
    நீட் தேர்வு – நாங்க படிக்காத பாடதிட்டமுன்னு அறிவாளி நீதிபதிக்கு தெரியுமா?
    நீட் தேர்வில் மாநிலத்திற்கு - மாநிலம் வெவ்வேறு கேள்வி தாள்கள் என அறிவாளி நீதிபதிக்கு தெரியுமா?
    ஜிப்மர் – எய்ம்ஸ் க்கு நீட் தேர்வு கிடையாது என்பதாவாது அறிவாளி நீதிபதிக்கு தெரியுமா?
    வடமாநிலங்களில் மருத்துவ கல்லூரிகள் மிக குறைவு என்பதாவாது அறிவாளி நீதிபதிக்கு தெரியுமா?
    வடமாநிலங்களில் பள்ளி படிப்பை தாண்டுவது பணக்காரர்கள் மட்டும்தான் என்பது அறிவாளி நீதிபதிக்கு தெரியுமா?
    சிபிஎஸ் பாடதிட்டம் சிறந்தது என்றால்- தமிழகத்தை வி;ட வடமாநிலங்கள் எதில் முன்னனேறி உள்ளது?
    நீதிபதி குமாரசாமி போன்றவகளுக்கு என்ன கவுன்சிலிங் தர போகிறோம்?

    ReplyDelete
  23. ஆனால், அடிப்படையில் ஒன்றை ஆசிரியர்கள் மட்டுமின்றி, அனைத்து அரசு ஊழியர்களும் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.
    உங்கள் துறைகளில் உள்ள பிரச்சனைகளில்
    அடிப்படை வசதியான
    சரியான கட்டிடம்,
    சுத்தமான குடிநீர் ,
    சுகாதாரமான கழிப்பிட வசதி போன்றவற்றை பெறுவதற்கும்,
    உங்கள் துறைகளில் உள்ள குறைகளான
    சரியான நேரத்திற்கு செல்லாமை ,
    லஞ்சம் செய்பவரை அடையாளம் கண்டும் கண்டுகொள்ளாமல் இருத்தல் , நேர்மையாக இருந்த ஊழியர் பாதிக்கப்படும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிடுருத்தல், போன்றவற்றையும் சரி செய்வதற்கு என்ன முயற்சியும், செயல்களையும் செய்ய வேண்டி உள்ளது என்பதையும் சிந்திக்க வேண்டி உள்ளது.

    ReplyDelete
  24. உங்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியவை தான்,
    பலகாலமாக போராடிக் கொண்டிருக்கிறீர்கள்.

    நீங்கள் உங்களுக்காக மட்டுமின்றி,
    வர போகின்ற அரசுஊழியர்களுக்காவும் சேர்த்துத்தான் போராடுகின்றீர்கள்.
    அதில் நீங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. Entha neethipathi theerpu udaney koduthar!!! Peoples kitta irunthu amount tha vanguringa... Naadula nadukura aniyayatha parunga... Vaiya thurakka mudila

    ReplyDelete
  26. ungal poraattam vetri adaiya vaazhthukal....

    ReplyDelete
  27. கிருபாகரன் படிங்க
    நீதிபதி உள்ளாடை துவைக்க மறுத்த வசந்திக்கு நோட்டீஸ்
    சத்திய மங்கலத்தில், சார்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் வசந்தி என்பவருக்கு, இரண்டு நாட்களுக்கு முன், சார்பு நீதிபதியிடம் இருந்து ஒரு ஆவேச நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    அதில் “சார்பு நீதிபதி வீட்டில் துவைப்பதற்கு போடப்படும் துணிகளை சரிவர துவைக்காமல் இருப்பதாகவும், குறிப்பாக உள்ளாடைகளை அருவருப்படைந்து தூக்கி வீசி விடுவதாகவும், இது குறித்து நீதிபதியும் அவரது மனைவியும் கேள்வி கேட்டால் எதிர்த்து பேசுவதாகவும்” குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
    அது மட்டுமல்லாமல், இப்படி குற்றம் இழைத்திருப்பதற்காக , வசந்தி மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டும், அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
    இந்த நோட்டீசையும், சத்தியமங்களை சார்பு நீதிபதியே , கையெழுத்திட்டு, பெறுநர் முகவரியுடன் அனுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோட்டீசை பெற்றுக்கொண்டதாக வசந்தியும் பதில் கையெழுத்திட்டுள்ளார் என்பதும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
    இந்நிலையில், இந்த நோட்டீஸிற்கு பதில் அளித்துள்ள வசந்தி, “தான் இனிமேல் இப்படிப்பட்ட புகார்கள் வராத அளவிற்கு ஒழுங்காக பணியாற்றுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    உள்ளாடை துவைக்க மறுத்த வசந்திக்கு, தற்போது விளக்கம் அளித்துள்ள வசந்திக்கு, அப்படி என்ன தண்டனை அளிக்க போகிறார் இந்த நீதிபதி என்பதுதான், தற்போதைய ஒரே கேள்வியாக இருக்கிறது

    ReplyDelete
  28. எந்த ஒரு ஆசிரியரியருக்கும் மாணவர்கள் மேல் அக்கறை இல்லாமல் இல்லை.
    வேலை நிறுத்தம் வரப்போகிறது, அதற்குள் காலாண்டு பாடத்தை முடிக்கவேண்டும் என்ற வேகத்தில் காலை மாலை இரு வேலையிலும் சிறப்பு வகுப்பு எடுத்து முடித்து விட்டதோடு மட்டுமல்லாமல் இன்று போராட்டத்தில் இருந்து கொண்டு ம் தேர்வு எப்படி எழுதினார்களோ, என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ என்று வீட்டைப்பற்றி கூட கவலைப்படாமல் மாணவர்களைப் பற்றிய சிந்தனையில் தான் கோஷம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் எம் ஆசிரியர்கள்.

    ReplyDelete
  29. உங்களுக்கு உண்மை தெரியவில்லை

    ReplyDelete
  30. நீதிபதி கிருபாகரன் அவர்களே, நீங்களே ஒரு உத்தவிட்டு,இனி
    ஐஏஎஸ்,ஐபிஎஸ். ம ந்திரிகள் , நீதிபதிகள் நாடளுமன்ற ,சட்ட மன்ற
    உறுப்பினர்கள்.உள்ளிட்ட அனைவரின் குழந்தைகளையும் அரசுப்
    பள்ளியில்தான் சேர்க்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்குஅ,
    ஆசிரியர்களுக்கும் இது கட்டாயம் என்று உத்தரவிடுவதோடு, அனைத்து
    தனியார் பள்ளிகளையும் அரசே நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு
    தமிழகத்துக்கு ஏன் முன் மாதிரியாகத் திகழக்கூடாது?

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி