Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

JACTTO-GEO : உயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து போராட்டம் தொடர்பாக முடிவெடுப்போம்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று ஜாக்டோ- ஜியோ உயர்நிலை குழு கூட்டத்திற்கு பின், போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.


பழைய  ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும், ஊதிய உயர்வு உள்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செப்டம்பர் 7ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்  என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்தனர். அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று பிற்பகலில் ஜாக்டோ - ஜியோ உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், மாயவன் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: நியாயமான 4 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். செப்டம்பர் 21ம் தேதி, போராட்டத்துக்கான தீர்வுடன் ஆஜராகுமாறு தலைமை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்துவோம். அப்போது அரசின் அடக்குமுறை, மிரட்டல் தொடர்பாக முறையிடுவோம். அதில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும்பட்சத்தில் போராட்டத்தை கைவிட்டு பணிகளை தொடருவோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 22ம்தேதி மதுரையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுப்போம்.
ஒவ்வொரு முறையும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும்போது அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. சம்பளத்தை இழந்துதான், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 தாசில்தார்களை, மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த உத்தரவை கலெக்டர் உடனடியாக திரும்ப பெற வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜரானபோது கேட்கப்பட்ட கேள்விகள், அவற்றுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் தொடர்பான விளக்க கூட்டம் செப்டம்பர் 19ம் தேதி எல்லா மாவட்டங்களிலும் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment

 1. 2013 TET தேர்ச்சி பெற்றோர்களே!
  தற்போதைய நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை மாற்றினால் பாதிக்கபடுபவரா நீங்கள்!
  இம்முறை தொடர வேண்டுமா? விபரீதத்தை உணர்வீர். விரைந்து செயல்படுவீர்!

  மாதிரி படிவம்:

  ஆசிரியர் தகுதிதேர்வில் நடைமுறையில் உள்ள (அரசாணை 71 ) வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டுகிறோம்.

  பெயர் : க.பாரதி கண்ணன்
  பதிவு எண்: 13TE20209111
  அலைபேசி : 950095482
  முகவரி : 11/2 அன்னை இல்லம்
  லெட்சுமிபுரம்,
  காந்திதெரு, 
  திருமயம் வடக்கு,
  புதுக்கோட்டை -612043

  மதிப்பிற்குறிய ஐயா வணக்கம்.
  ஆசிரியர் நியமனத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
  தங்கள் உண்மையுள்ள ....
  (தேர்வரின் கையொப்பம்)

  முடிந்த அளவில் புகைப்படம் இணைத்து அனுப்பவும்
  மேற்குறிப்பிட்ட விபரங்களை A4 தாளில் நிரப்பி கையொப்பமிட்டு தெளிவாக புகைபடமெடுத்து கீழ்கண்ட
  WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.
  Cell No :9500959482
  99426 61187
  90472 94417

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives