என்ன தான் செய்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்? Special Article - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2017

என்ன தான் செய்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்? Special Article

உண்மையில் என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?

பொதுவான பார்வையில்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றால்
அதிக சம்பளம் வாங்குபவர்கள்,
வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குபவர்கள்,
இன்னும் சிலவும்...


உண்மை நிலை என்பதும் இது தானா?
வாருங்கள், ஒரு ஆய்வு செய்து பார்ப்போம்...

பள்ளிக்கு அருகிலேயே இல்லமிருப்பவர்கள் இருந்தாலும், 100 கி.மீ முதல் 200 கி.மீ முதல் தினமும் பயணம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஓரிருவர் நேரம் தவறி பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பான்மையானோர் சரியான நேரத்தில் பள்ளிக்குச் சென்று, இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களை ஒழுங்குபட வரிசைகளில் நிற்க வைப்பதில் தொடங்குகிறது இவர்களின் வேலை...

பள்ளி வளாகத்தினுள்ளும், பள்ளி வகுப்பறைகளிலும் குப்பைகள் இல்லாதவாறு அவற்றை அப்புறப்படுத்தி 'தன்' பள்ளியெனும் எண்ணத்துடன் அந்த நாளினைத் தொடங்குகின்றனர்.

வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னரே அன்றைய நாளில் மாணவர்களுக்கு குடிநீர் இருப்பையும், கழிவறையில் நீர் இருப்பையும், அவர்களுக்கு சமையல் செய்யவும், சாப்பிட்ட பின் மாணவர்கள் கை கழுவவும் தண்ணீரின் இருப்பை கிடைக்குமாறு செய்து அந்த நாளை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமாறு உறுதி செய்துகொள்கின்றனர்.

இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் நிற்கும் போதே யார் குளித்தது, யார் தலை வாரியது, யார் பல் துலக்கியது, யார் நகம் வெட்டியது, யார் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பது, யார் துவைக்காத அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பது எனவும் கண்காணித்து அவற்றை முறைப்படுத்தவும் செய்கின்றனர்.

வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் மனநிலைகளையும், உடல்நிலைகளையும் அவர்கள் முகத்தினை வைத்தே தீர்மானிக்கின்றனர். நாம் நினைப்பது போல நம் வீட்டிலுள்ளது போலவே அந்த குழந்தைகளின் வீட்டிலும் நிலை உள்ளதாக நினைத்துக்கொள்ளக்கூடாது !
குடித்து விட்டு சண்டை போடும் தந்தை, வேலைக்கே செல்லாத தந்தை, தந்தையை நிம்மதியாய் இருக்கவிடாத தாய், தாய்-பாட்டி சண்டைகள், சில இடங்களில் நாகரீகமற்ற தவறான பழக்கம் கொண்ட சில தாய், தந்தையரும் உண்டு ! இதுவுமல்லாமல் மாடு மேய்த்துவிட்டும், ஆடு மேய்த்துவிட்டும், சுள்ளி பொறுக்கிவிட்டும், விறகு வெட்டிவிட்டும், சுமை சுமந்து பல தூரம் அதைக் கொண்டு சென்ற பின் பள்ளிக்கு வரும் மாணவர்களும் இன்னும் உள்ளனர்.

இப்படி பல்வேறு சூழல்களிலிருந்து வரும் குழந்தைகளை அவர்களின் முகத்தினை வைத்தே புரிந்துகொள்வதென்பது அந்த ஆசிரியர்களுக்கே உண்டான திறமை.

சில நேரங்களில் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே கிடப்பதும், அவர்களின் பெற்றோரும் அவற்றை கண்டுகொள்ளாமலிருப்பதும் அரங்கேறும்.

தனியார் பள்ளியிலிருந்து கட்டணக்கொள்ளையால் தன் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்த பெற்றோரின் மனசாட்சிக்குத் தெரியும், தனியார் பள்ளியில் தன் பிள்ளையை படிக்க வைத்தபோது பெற்றோருக்கு இருந்த அந்த கண்காணிப்பு என்பது அரசுப்பள்ளியில் சேர்த்தவுடன் மாயமாக ஆகிப்போகிறது. விலையில்லாமல் அளிக்கப்படும் எதற்குமே மதிப்பில்லை என்பது இங்கு மிகச்சரியாக பொருந்துகிறது.

அன்று பள்ளிக்கு வராத மாணவர்களை வர வைக்க, சில ஆசிரியர்கள் தொலைபேசி மூலமாகவும் அல்லது மாணவர்களிடம் விசாரித்தும் அந்த சரியான காரணத்தை உறுதி செய்துகொள்கின்றனர்.

பசியில் இருக்கும்போது காதுகள் கேட்காதென்பது யாவரும் அறிந்ததே, சில மாணவர்கள் தினமும் பசியோடே பள்ளிக்கு வருவர். அந்த பழக்கத்தினை மாற்றவும் தங்களால் ஆன முயற்சியினை மேற்கொள்கின்றனர்.

வகுப்பிற்கு முன்னரே கரும்பலகையில் தேதியையும், கிழமையையும் எழுதியவுடனேயே அங்ங்ங்கு தொடங்க்குகிறது பதிவேடுகளின் பங்களிப்பு.
சிலர் விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிக்கொண்டதைப் போலவே இந்த பதிவேடுகளைக் கண்டு கவலையுறுகின்றனர்.
ஏன் அப்படி ஒரு கலக்கம் இந்த ஆசிரியர்களுக்கு?
ஆம். கலக்கமுறத்தான் செய்வார்கள். ஏனெனில் அவற்றின் எண்ணிக்கைகளும், அவற்றில் இடம்பெற வேண்டிய தகவல்களின் எண்ணிக்கையும் எக்கச்சக்கம்.
தோராயமாக பள்ளியிலும், வகுப்புகளிலும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் அறுபதைத் தாண்டும் என்பது சிலரின் கருத்து ! ! !

இத்தனையையும் தாண்டி வகுப்பு எடுக்கலாமென்றால் இந்த முறையில் தான் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. மாணவர்களின் இருப்பிட அமைவிடத்தைப் பொருத்தும், அவர்களின் மனநிலையையும், பழக்க வழக்கங்களைப் பொருத்தும் வாழ்வியல் முறைகளைப் பொருத்தும் அவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறைகள் பற்றியும் அக்குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே மிகச்சரியாக தெரியும்.  இது இடத்திற்கு இடம் மாறுபடும்.

அதையும் கடந்து வகுப்பு எடுக்க ஆரம்பித்து மாணவர்களின் மனநிலையை ஒருங்கிணைத்து எடுத்துக்கொண்டே இருக்கும் போதே, நூறு நாள் வேலைத் திட்டத்திலோ அல்லது வேறு ஏதேனும் வேலைக்குச் செல்லும் பெண்மணி ஒருவர் திடீரென நேராக வகுப்பினில் ''இந்தாடா, அம்மா வேலைக்கி போறன், பாப்பாவ புட்சிக்கோ '' என்று மொத்த மாணவர்களின் கவனத்தையும் ஒரேயொரு நொடியில் பஸ்பமாக்கி விட்டு சென்றுவிடுவார். அவர் நகர்ந்த அடுத்த நொடி அந்த குழந்தை எந்தளவு பீறிட்டு அழும் என்பதும், அதைச் சமாதானப்படுத்தி மீண்டும் வகுப்பில் மாணவர்களின் கவனத்தைக் கொண்டு வருவதென்பது அவ்வளவு சாதாரணமான செயல் அல்ல.

வீட்டில் வேலை இருந்ததாலும், பெற்றோரின் கவனமின்மையினாலும் சில/பல பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதாமலும், நடத்திய பாடத்தினை படிக்காமலும் திருதிருவென முழித்துக்கொண்டு அமர்ந்திருப்பர். இவர்களை எப்படி சமாளிப்பதென்றும் புரியாமலும், பெற்றோரை அழைத்து வர பல முறை சொல்லியனுப்பிய பின் நேரில் வரும் பெற்றோர்களிடத்தில் எதைச் சொன்னாலும், தன் பிள்ளை, அவன் கல்வி என்னும் எண்ணமேயில்லாமல் ஒரு பதில் வரும். இப்போது அந்த ஆசிரியர் திருதிருவென முழிப்பதை நம்மால் பார்க்க இயலும்.

சில மாணவர்களின் தவறான செயல்களுக்காக அவர்களைத் திட்டவோ, அடிக்கவோ அல்லது அவர்களின் மனம் நோகும்படியோ நடக்கக்கூடாதென்பது ஆணை. எந்தளவு உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமென நினைக்கிறீர்கள்? எனக்கெப்படி தெரியும்? நான் என்ன ஆசிரியரா? என்கிறீர்களா? குறைந்தபட்சம் ஐந்தே ஐந்து பிள்ளைகளை ஒரே அறையில் உங்களுடன் அமர வைத்து அவர்களின் கையில் புத்தகத்தைக் கொடுத்து டி.வியோ மொபைல் போனோ இல்லாமல், அவர்களுக்கு எந்தவித கண்டிப்பும் இன்றி அவர்களை படிக்கவும் வைத்து ஒரு நாளை கடத்திப் பார்த்தோமானால் நாம் யாரைப் பற்றி எவ்வளவு எளிதாக பேசிவிட்டோம் என்பதை நாம் உணர்ந்துவிடுவோம்.

இது இப்படியிருக்க, ஒரே அறையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் பல வகுப்பு மாணவர்களை வைத்துக் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அதே ஆசிரியர் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவது என்பது, அதைப் பார்ப்பவர்களுக்கு சிரிப்பாகவும், அதைப் புரிபவர்க்கு சவாலாகவும் இருக்கும்.

காலை நேர வகுப்புகள் முடிந்தவுடன் மதிய உணவு இடைவேளைக்கு யார் கை கழுவாமலும், தட்டு கழுவாமலும் வருகிறார்கள் என்பதையும் ஒவ்வொருவராக கூர்ந்து கவனிக்கிறார்கள். இதைக்கூடவா கவனிக்க வேண்டும், நம்பும்படியாகவா உள்ளது எனக் கேட்பவர்கள் நிதர்சனம் புரியாதவர்கள் என்பதில் ஐயமேதுமில்லை. ஆம். அதைக்கூட கற்றுத்தராத பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர்.

உணவை மட்டுமே சுகாதாரமாக உண்ண சொல்லித் தருகிறார்களா? அல்ல. கழிவறைப் பயன்பாடும், கழிவறைச் சுத்தமும், கழிவறைகுச் சென்று வந்த பின் மாணவர்கள் கை, கால்களை சுத்தப்படுத்துவது முதல் இந்த ஆசிரியர்கள் சொல்லித்ததுகின்றனர் என்பதே நம்மை ஆச்சர்யப்படுத்தும் எதார்த்தம் !

நாமெல்லாம் லேப்டாப், ஸ்மார்ட் போன், LED TV என உயரப்பறந்துகொண்டிருக்கும்  போது இவற்றையெல்லாம் நம்ப நமக்கு சற்று கடினமாகவே இருக்கும். இரட்டைத் தந்தையுடனோ அல்லது இரட்டைத் தாயுடனோ கூட சில குழந்தைகள் இருக்கலாம், அவர்களின் மனநிலையை சற்றே யோசித்துப் பார்த்தால் நமக்கு மனம் கலங்கவே செய்யும்.

சரி. எல்லாம் முடிந்து மீண்டும் மதிய வகுப்புகள் தொடங்கி கவனம் ஈர்க்கப்பட்ட நேரம் திடீரென வகுப்பினுள் நுழையும் உருவத்தை அனைவரும் திரும்பிப் பார்த்தால் அங்கு குடித்து விட்டு யாரோ ஒருவரின் தந்தை நின்றுகொண்டிருக்கலாம். எதற்க்குப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், யார் முன் பேசுகிறோம் என தன் அரைகுறை ஆடையைப் பற்றிய கவலை கூட இல்லாதவொரு நபரை நாகரீகமான முறையில் மட்டுமே நடந்துகொண்டு பேச்சை வளர்க்காமல் வழியனுப்பி வைப்பதென்பது எந்தளவில் இயலும் என நாமும் ஒரேயொரு நிமிடம் அங்கு நின்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கு மிஞ்சுவது வெறும் பதில்களற்ற மௌனம் மட்டுமே.

மறுபடியும் வகுப்பெடுக்கத் தொடங்கி அதில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து பாடத்தை மனதில் பதிய வைப்பதென்பது நொடி நேரப் பெருந்தவம் !!!

இவற்றையெல்லாமும் கடந்து கல்வி கடந்து அந்த மாணவர்களை ஏட்டுச்சுரைக் காய்களைத் தாண்டி கறிக்கு உதவும் வண்ணம் அவனைத் தயார்ப் படுத்துவதுடன், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் இன்னும் பல்வேறு மதிக்கத்தக்க தலைவர்களின் பிறந்த நாட்களின் கொண்டாட்டங்களுக்கு அவர்களை தயார்ப்படுத்துதலும், பல சமயங்களில் நடைபெறும் கணினி பயன்பாட்டுப்போட்டி,  ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சதுரங்கப்போட்டி, கபடி, கோ கோ என இன்னுமின்னும் எக்கச்சக்கமான போட்டிகளுக்கும் மாணவர்களை முழுமையாக இந்த ஆசிரியர்களே தயார்படுத்துகின்றனர்.

இவற்றினிடையில் கல்வித்துறையின் பல்வேறு பயிற்சிகளைப் பெறுவதும், அரசு தரும் விலையில்லாப் பொருட்களை பெற்று வழங்குவதும், ஊர்க்கணக்கெடுப்பு நடத்துவதும், அரசாங்கத்தின் தேசிய அளவிலான கணக்கெடுப்பு நடத்துவதும், கழிவறைகள் இல்லாத இடங்களிலும், யானை போன்ற காட்டு விலங்குகள் உலாவுமிடங்களில் தேர்தல் பணிகளைச் செவ்வணே செய்வதும் கூட இவர்கள் தான் என்பது நமக்கு இவர்களின் மேல் ஆச்சர்யமான மரியாதையையே ஏற்படுத்துகிறது.

''இந்தா இத எழுதி குடு வாத்யாரே" என அவர்கள் சாப்பிடும் நேரம் கூட அவர்களைச் சிலர் விட்டு வைப்பதில்லை. இதில் சாதிய, ஆண் பெண் பாகுபாடுகளில் சிக்கிக்கொள்ளாமலும், தன்னையும், தன் மாணவர்களுக்கும் பாதுகாத்துக்கொள்வதென்பதெல்லாம் கத்தியின் மேல் கால் ஊன்றி நடக்கும் வேலை !

வகுப்பறையில் ஆசிரியர்கள் தூங்கிக்கொண்டிருந்த காலமெல்லாம் போய், ஆசிரியர்கள் இமைக்க நேரமில்லா காலம் வந்ததை அரசியல் தெடர்பற்ற ஆய்வாளர்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்ளுவர்.

மேற்சொன்ன சவால்கள் அனைத்தும் ஆசிரியர்கள் சந்திப்பது என்று மட்டுமில்லை, ஆசிரியர்களின் மூலமாக அரசு சந்திப்பது. தனியார் பள்ளிகளின் ஆடம்பரங்களையும், கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் மீறி இன்றளவும் தன்னால் இயன்ற அளவு அரசுப்பள்ளிகள் வென்று கொண்டேதான் இருக்கின்றன. அந்த வெற்றிகள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை, வேண்டுமென்றே சில இடங்களில் மறைக்கவும் படுகிறது.

இதெல்லாம் காரணம் காட்டி மட்டும் அவர்கள் சம்பளம் வாங்கலாமா என்று இன்னும் சிலருக்கு ஐயம் இருக்கலாம். இதோ அதற்கான பதில்...

பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுகிறது, முழுமையாக. நசஷ்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளைக் கணக்கெடுத்துச் சொன்னால் ஒரு வேளை உங்களுக்கு அந்த உண்மை விளங்கலாம். பெற்றோர் கூட கண்டுகொள்ளாத வருங்காலச் சந்ததியின் பெரும்பகுதியை அரசு ஆசிரியர்களை வைத்து ஆழ்ந்த பொறுப்புடன் கவனித்துக்கொள்கிறது. இங்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுவதில்லை, வருங்கால சமூகத்தை திடமாக உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஆட்சிகள் மாறிக்கொண்டே தான் இருக்கும். அரசு என்பது அரசியல்வாதிகள் அல்ல. உள்ளார்ந்து பார்த்தோமானால் அரசு ஏழைகளுக்கானது, கவனிப்பற்றோருக்கானது, கல்வியற்றோருக்கானது. இவர்களையெல்லாம் மேல் கொண்டுவரும் அரசின் கருவிகள் மட்டுமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இவர்களின் சமூக சேவை மதிக்கப்படவில்லையெனும் சரி, நிச்சயம் நம்மால் மட்டுப்படுத்தப்படக்கூடாது.

மதிக்கப் பழகுவோம், அவர்களும் மனிதர்கள் தானே !

27 comments:

  1. Sir 100% correct,,,,but we never share this

    ReplyDelete
    Replies
    1. சாதாரணமாக படிப்பறிவு இல்லாதவர்கள் கூட அரசியலில் பதவிகளைப் பெற்று கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதை நாள்தோறும் பார்க்கிறோம். அதனை தடுத்து தண்டிக்கவேண்டிய நீதிமன்றங்கள் மௌனம் காத்து நாட்டை கடன் அதிகமுள்ள நாடாக மாற்றியுள்ளன. நாம் கண்கூடாகப் பார்த்த எத்தனையோ ஊழல்கள், பெட்டிகள், புதிதாக அச்சடிக்கப்பட்ட பணம், சுரண்டல்கள், தலைமை செயலாளர் மீது குற்றச்சாட்டு என்று எத்தனையோ கோடிக்கணக்கான ஊழல்கள் நீதிமன்றங்களிலும் நீதி மன்றங்களுக்குச் செல்லாமலேயும் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது. இங்கு போராடுபவர்களுக்கு எதிராக பொங்குபவர்கள் அரசு ஊழியர்களின் பணம் 10 சதவீதம் என்னவாகிறது என்று போராடுகிறார்களே என்று இல்லாமல் கொச்சைப் படுத்துவதிலே குறியாக உள்ளது ஏன்? மதிப்பு ஊதியம், தொகுப்பு ஊதியம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோர்களை அடிமையாக வைத்து 7000 ரூபாய் ஊதியம் 7 வருடமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உயர்த்திக் கொடுக்கப் பணம் இல்லை. கொள்ளை அடிப்பவர்களுக்கு உயர்த்திக் கொடுக்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வருமானம்? தயவுசெய்து சிந்தியுங்கள்!!

      Delete
  2. பின்ன என்னத்து உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேக்குறிங்க

    ReplyDelete
    Replies
    1. Taniyar palligalil elea vaguppukkum teacher irukanga anal govt.schoolsil inum sila vaguppukkum teacherea illa. Ithele tet trb exam nadathi postings podalama vanama enru josiam parathukkondu irukkirathu arasu. Neet thervil pass seitha manavargal paditha schoolsil yarum tet trbil therchi petravargal illai.

      Delete
    2. பல ஆசிரியர்களின் பிள்ளைகள் (எங்களது இரு பிள்ளைகளும்) அரசு பள்ளிகளில் பயில்கின்றனர் . நன்றி கெட்ட உலகம்

      Delete
  3. நாங்கள் ஒரு வகையில் பெற்றோர்ககள் அது எங்களது உரிமை

    ReplyDelete
  4. அருமை ஆனால்் இன்்றைய ஆசிரியர்்களின்் நிலை என்்ன?

    ReplyDelete
  5. எல்லோரையும் குறை கூறுவது தவறு விரைவில் சிலரும் திருத்திக்கொள்வார்கள்

    ReplyDelete
  6. My daughter also studying in govt school

    ReplyDelete

  7. நீங்கள் மேற்கூரிய அனைத்துக் கருத்துக்களும் உண்மையே.

    ஆனால்

    காலத்திற்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப பிரச்சனைகள் எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

    அதற்கான தீர்வை நோக்கிய பயணமும் , செயல்பாடுகளும் எவ்வாறு நாம் கட்டமைக்கிறோம் என்பதை பொறுத்து மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    ஆசிரியரும், மருத்துவரும் எந்தக் கருத்தைக் கூறினாலும் அதில் எதிர் கருத்து கூறாமால் அப்படியே ஏற்றுக் கொண்ட காலம் மாறி விட்டது.

    ஏனெனில் சில, பல மோசமான முன் உதாரணங்களை (ஆசிரியர் / மருத்துவர்) நம் வாழ்க்கையில் எதிர்கொள்வதால் இந்த மாற்றம் .

    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

    இன்று
    நாம் இறைவனையே சந்தேகிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

    ஒரு ஆசிரியன்
    சிற்பி போல
    கல்லாகி உள்ள மனிதர்களை
    உயிருள்ள,
    மனித நேயம் மிக்க,
    பண்புள்ள ,
    மகிழ்ச்சி எண்ணம் கொண்டவர்களாக உருவாக்கக் கூடிய வல்லமை படைத்தவர்கள் நீங்கள்.

    நீங்கள் நினைத்தால்
    ஒரு
    நேர்மையான,
    மனிதாபிமானமுள்ள ,
    மகிழ்ச்சியான,
    பண்பான சமூகத்தை உருவாக்கலாம்.

    ReplyDelete
  8. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜாக்டோ - ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.
    நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராட்டம் நடத்தும் இவர்கள் எதிர்காலத்தில் ஏதாவது நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நேற்று நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார். ஆசிரியர் சங்கங்கள்தான் போராட்டத்தை தூண்டுகின்றன. எனவே ஆசிரியர் சங்கங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார்.

    இந்த போராட்டத்தால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டியதிருக்கும். மேலும் தவறு செய்த ஆசிரியர்கள் மீது ஆசிரியர் சங்கத்தினர் எப்போதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா?
    அது போல் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு ஆசிரியர்கள் கூட சங்கத்தில் இருந்திருக்க மாட்டார்கள். ஆசிரியர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக உயர்நீதிமன்றம் 12 கேள்விகளை கேட்டிருந்தது. இந்த கேள்விகள் தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

    அதில் போராட்ட நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாளாக கருதப்படும். 6 ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. போராட்டம் தொடர்பாக 43,508 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஓராண்டில் அரசு ஊழியர்களுக்கான சம்பளமாக ரூ.700 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டால் மாற்று ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ReplyDelete
  9. Dear govt employees and Teachers,

    I have some questions to you.

    Only 2% govt Teachers students are studying in govt school what about remining?

    How many time govt school has been secured state rank in 10 and 12?

    For that you r telling syllabus is not good and school education rules is not good?

    really if you r taking care about the govt school students education then why don't you do protest against govt rules?

    When and for what r you doing protest only for your salary and your personal benefits?

    Now a days what about the govt school students strength only 100 or max 150.
    Ok why parents r searching private school because govt Teachers are not working, no discipline and no punctual.

    Kamarajer said school department is not a revenue department here you should not expect money instead of public respect.

    Do not compare with IT Employee what do you know about them they r working for 12 hours and innovating more and more.
    What about you? Think and speak do not lose your word?

    Now quterlly exam is going on but you r doing protest. All your son's and daughters are studying in private school suppose if they start to do protest, simplly will you watch?

    Who groomed private school? govt Teachers only, first have you ever created awareness about govt school , have you done any rally chain program for this?

    IT employee having good knowledge and innovating ideas, don't compare your self with them you'll spoil your dignity?

    If you want more salary come to IT Department and proof your knowledge and get high salary.

    No good politicians no good govt employee.

    Finally Tamil Nadu NAASAMA POGATUM.

    By

    Wellfare to Poor people.

    ReplyDelete
    Replies
    1. Private school shares (Finance Partners) are Govt.Teachers,.

      Delete
  10. Good article.100%true

    ReplyDelete
  11. What is the take home salary of newly appointed pg asst

    ReplyDelete
  12. What is the take home salary of newly appointed pg asst

    ReplyDelete
  13. "என்ன தான் செய்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்? "
    இது மக்கள் கேட்கின்ற கேள்வி

    ReplyDelete
  14. ஜெயலலிதா இருந்திருக்கணும்.. போராட்டமா.. போராட்டம்.

    ReplyDelete
  15. She will say terminate all of them. And appointment all unemployee

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Welcome sir, pls forward my msg to all teachers. If u r ready protest for students life we r ready to do protest for u.

    ReplyDelete
    Replies
    1. Govt staffs,If u r ready protest for students life
      மக்கள் நிப்பாங்க உங்க கூட

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி