நவம்பர் 1-ம் தேதி முதல் புதிய காலஅட்டவணை: நெல்லை, மதுரை, செங்கோட்டைக்கு புதிய ரயில்கள் - 51 ரயில்களின் வேகம் அதிகரிப்பு; மன்னை எக்ஸ்பிரஸ் தஞ்சாவூர் செல்லாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2017

நவம்பர் 1-ம் தேதி முதல் புதிய காலஅட்டவணை: நெல்லை, மதுரை, செங்கோட்டைக்கு புதிய ரயில்கள் - 51 ரயில்களின் வேகம் அதிகரிப்பு; மன்னை எக்ஸ்பிரஸ் தஞ்சாவூர் செல்லாது

வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள ரயில்வே கால அட்டவணையில் தாம்பரத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டை, குஜராத்துக்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், 51 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.தெற்கு ரயில்வே சார்பில் புதிய ரயில் காலஅட்டவணை வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த அட்டவணையில் புதிதாக இயக்கப்பட உள்ள ரயில்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, தாம்பரம்-பகத்-கி-கோத்திக்கு (ராஜஸ்தான்) ஹம்சாபர் வாராந்திர விரைவு ரயில், திருநெல்வேலி, செங்கோட்டை இடையே தினசரி அந்தியோதயா விரைவுரயிலும், திருநெல்வேலி-காந்திதாமுக்கு (குஜராத்) இடையே வாராந்திர ஹம்சாபர் விரைவுரயிலும் இயக்கப்பட உள்ளன.இதேபோல், சென்னை சென்ட்ரல்-மதுரை இடையே வாராந்திர ஏசி விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும், சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் கொல்லம் வரை நீட்டிக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர்-மன்னார்குடி மன்னை விரைவு ரயில் தஞ்சை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மயிலாடுதுறை, திருவாரூர், நீடாமங்கலம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்-பழனி விரைவு ரயில் பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-பாலக்காடு டவுன் அமிர்தா விரைவு ரயில் மதுரை வரை நீட்டிக்கப்படுகிறது.கும்பகோணம்-தஞ்சாவூர் பயணிகள் ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்படுகிறது. திருச்செந்தூர்-பழனி பாசஞ்சர் ரயில் பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், 51 விரைவு ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி