2009 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2017

2009 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு!!!


மதிப்பிற்குரிய ஐயா !!! வணக்கம். நான் தற்பொழுது ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.
தமிழகத்தில் 2009-க்குப் பிறகு நியமனம் செய்யபட்ட 22000 இடைநிலை ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக்குழுவால் ஏற்பட்ட பெரும் ஊதிய முரண்பாடு, ஊதிய இழப்பு இதுவரை தீர்க்கப்படாமலேயே உள்ளது.
இந்தப் பிரச்சனையால் பன்னிரண்டாம் வகுப்பும் முடித்து, அதன் பிறகு D.T.Edஎனப்படும் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பினை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய Pay Band 2- 9300-34800 + 4200 க்கு பதிலாக, 10-ம் வகுப்பு தகுதிக்கான ஊதியம் Pay Band 1 - 5200-20200 + 2800 மட்டுமே  வழங்கப்பட்டு வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் 2009 க்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் பெரும் மாத ஊதியம் கூட 2009க்கு பின் நியமனம் செய்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப் படவில்லை என்பது இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலை 2009க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட  இடைநிலை ஆசிரியர்களின் பொருளாதார நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதோடு,  சம வேலைக்குச் சம ஊதியம் என்ற சமூக நீதியும் மறுக்கப்படும் அவல நிலையையும் இவ்வூதிய முரண்பாடு ஏற்படுத்தி உள்ளது. ஆதலால், வரும்7வது ஊதிய குழுவிலாவது தயவுகூர்ந்து எங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு டிப்ளமோ தகுதிக்கு உரிய Pay Band 2 - 9300-34800 + 4200 என்ற 6-வது ஊதியக்குழுவின் ஊதியக்கட்டின் அடிப்படையில், புதிய 7-வது ஊதியக் குழுவின் ஊதியத்தை எங்களுக்குத் திருத்தியமைத்து வழங்க தகுந்த நடவடிக்கைகள் எடுத்து உதவுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.

12 comments:

  1. படித்த படிப்புக்கு ஏற்ற சம்பளம் கொடுக்க ஏன் தயக்கம்?
    நாங்கள் ஆசிரியராக? இல்லையா?
    துப்புரவு பணியாளர்கள் சம்பளத்தை கொடுத்து ஏன் கேவலப்படுத்துறீங்க?

    ReplyDelete
  2. Avan avan B.E M.E padichitu theru theruva alaiyuran and Naraya college la sambalam ellam velai pakurangae ethonayo per,Athuvum Elai makkal 5 kum 10 kum pichai edukurangae neenga(Govt staff/Teachers) 50,000 mum 70,000 vangitu verum DTed padichitu goverment school ah pulingaluku olunga solli kuduakkama inga sambalam pathathu poratam panreengala ungalukku manasatchiyae ilaya!!.Poi parunga ellam mathavanga katra vari panathalu neenga vangi thinreenga ithallam ungaluku seriukuma!

    ReplyDelete
    Replies
    1. U mean verum Dted..Dted muduchavanga elarum 12th la marks above 90% Mela...Moreover ,additional qualification M.phil vara muduchutu irukom..Plus TET exam pass pannitu vanthurukom...

      Delete
    2. Ok ipathAna tet vachutu kanga ok.but munnadi ullanvagalaluku ethum ilaya.athunala than government school admission koranjuthuku karanam.

      Delete
    3. Ok ipathAna tet vachutu kanga ok.but munnadi ullanvagalaluku ethum ilaya.athunala than government school admission koranjuthuku karanam.

      Delete
    4. 1996 to 2001 and 2006 to 2011 both periods they have appointed with low quality teachers

      Delete
  3. கல்வித் துறையில் மட்டும் இல்லை அனைத்துஅரசுத் துறைகளிலும் இவ்வாறு முரண்பாடுள்ள செயல் திட்டங்களை வெறும் வெற்று அறிவிப்புகளாக அறிவித்துவிட்டு தேர்தல் வரும் போது நாங்கள் இதைச் செய்தோம் அதைச் செய்தோம் வரும் தேர்தலில் இதைவிட அதிகமாகச் செய்வோம் என்று கூறுகின்றார்கள். இதில் எந்த வேறுபாடும் கிடையாது அனைத்துக் கட்சிகளின் நிலையும் இதுதான்.
    முதலில் ஒரு செயல் திட்டம் என்பது வேறுபாடின்றி கடை நிலையில் உள்ள சாமானியனுக்கும் சென்று அடையுமாறுயிருக்க வேண்டும் நீங்களே தம்பட்டம் அடிக்கத் தேவையில்லை உங்களுடைய உங்கள் செயல்பாடுகளே உங்களின் வாக்குகளாக வரும்.

    ReplyDelete
  4. ithuve paravailla degree qualification appointment ana assistantku 5200-20200+2800 pay band la vakkirangale

    ReplyDelete
  5. Sir phd mudichavanae verum 10,000 vanguran

    ReplyDelete
  6. Sir phd mudichavanae verum 10,000 vanguran itha vida vera ena venum

    ReplyDelete
    Replies
    1. என் உங்களுக்கான தேர்வு எழுதி பணிக்கு தேர்வாகுங்கள் எங்களை விட அதிகமாக சம்பளம் கிடைக்கும். தேர்ச்சி ஆகவில்லை என்றால் அது உங்களுடைய குறை. நாங்கள் உங்கள் யாருடைய வேலையையும் பரிக்கவில்லை. உங்களால் முடியவில்லை என்றால் அமைதி காக்கவும்

      Delete
    2. ஏன் உங்களுக்கான தேர்வு எழுதி பணிக்கு தேர்வாகுங்கள் எங்களை விட அதிகமாக சம்பளம் கிடைக்கும். தேர்ச்சி ஆகவில்லை என்றால் அது உங்களுடைய குறை. நாங்கள் உங்கள் யாருடைய வேலையையும் பரிக்கவில்லை. உங்களால் முடியவில்லை என்றால் அமைதி காக்கவும்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி