நவம்பர் 4-ம் தேதி நடக்கிறது: தேசிய திறனாய்வு தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2017

நவம்பர் 4-ம் தேதி நடக்கிறது: தேசிய திறனாய்வு தேர்வு

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) நடத்தும் இந்தத் தேர்வு முதல்கட்டமாக மாநிலஅளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாக தேசிய அளவிலும் நடத்தப்படும்.இந்நிலையில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு நவம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் என்சிஇஆர்டி சார்பில் இத்தேர்வை அரசு தேர்வுத் துறை நடத்துகிறது.தமிழகத்தில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத இருப்பதாக அரசு தேர்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் மாணவர்கள் என்சிஇஆர்டி கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

அவர்களுக்கு பிளஸ் 2 வரை மாதந்தோறும் ரூ.1,250, அதன்பிறகு இளங்கலை, முதுகலை படிக்கும்போது மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படுகிறது. பிஎச்டி படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) விதிமுறைப்படி உரிய உதவித் தொகை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி