மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு ஐஏஎஸ் பயிற்சிக்கு ஏற்பாடு: நவ.5-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2017

மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு ஐஏஎஸ் பயிற்சிக்கு ஏற்பாடு: நவ.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

மீனவ பட்டதாரி ஐஏஎஸ் பயிற்சிக்கு நவ.5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.மீன்வளத் துறை மற்றும் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் கடல் மற்றும்
உள்நாட்டு மீனவர்குடும்பங்களைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு பிரத்யேக ஐஏஎஸ் பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார். தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.இதன்படி, கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசுவழிகாட்டுதல்களை மீன்வளத் துறையின் ‘www.fisheries.tn.gov.in’ என்ற இணையதளத்தில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை துணை, இணை இயக்குநர்கள், மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் இலவசமாக பெறலாம்.

கடைசி தேதி நீட்டிப்பு

விண்ணப்பதாரர்கள் மீன்துறை இணையதளத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் அல்லது நேரடியாக அக்.23-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது மீனவ இளைஞர்கள் இப்பயிற்சியை முழுமையாக பயன்படுத்த ஏதுவாக, பயிற்சிக்கானவிண்ணப்பம் பெறும் கடைசிநாள் நவ.5-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி