Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தொலை தொடர்புத்துறையில் இருந்து வெளியேறும் டாடா டெலிசர்வீசஸ்: என்னாகும் 5000 ஊழியர்களின் எதிர்காலம்?

நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடாவின் தொலைத்தொடர்பு சேவைப்பிரிவான 'டாடா டெலிசர்வீசஸ்' தொலை தொடர்பு சேவைத் துறையில் இருந்து வெளியேறும் முடிவெடுத்திருப்பதால், அதன் 5000 ஊழியர்கள் நிலை என்னாகுமென்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் டாடாவும் ஒன்று. இரும்பு உற்பத்தி முதல் தகவல் தொழில்நுட்பம் வரை அநேக துறைகளில் தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்துள்ள ஒரு நிறுவனம். இந்நிறுவனம் கடந்த 1996-ஆம் ஆண்டு தொலை தொடர்பு சேவைத் துறையில் முதன்முதலாக கால் பதித்தது. 'டாடா டெலிசர்வீசஸ்' என்னும் பெயரிலான துணை நிறுவனம் மூலம் 'லேண்ட் லைன்' தொலைபேசி சேவை மூலமாக  பணிகள் துவங்கியது. பின்னர் 2002-இல் சிஎம்டிஏ தொலைபேசி சேவைகள் துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2008-இல் ஜிஎஸ்எம் சேவைகளும் வழங்கப்பட்டது.

அதன் வரலாற்றில் முக்கியத் திருப்பமாக அடுத்த ஆண்டே ஜப்பானின் முன்னணி தொலைபேசி சேவை நிறுவனமான என்டிடி டோகோமா, டாடாவில் ரூ.14 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முன்வந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் 'டாடா டோகோமா' என்ற பெயரில் இந்த கூட்டு சேவை தொடர்ந்து வந்தது.

ஆனால் பலத்த பொருளாதார நஷ்டத்தின் காரணமாக 2014-ஆம் ஆண்டு இந்த வர்த்தக கூட்டணியில் இருந்து விலகுவதாக என்டிடி டோகோமா அறிவித்தது. அதற்கு அடுத்து இந்தியாவில் தனியாக சேவைகளை தொடர்ந்து வந்த டாடா வேறு சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து சேவைகளை அளிக்க முயன்றது. ஆனால் அந்த நிறுவனத்தின் தொடர் நஷ்டங்கள் காரணமாக அதிக அளவில் உயர்ந்த கடன் சுமையின் காரணமாக எதுவும் சரியாக நடக்கவில்லை. தற்போதைய நிலையில் அந்நிறுவன கடன்சுமையானது ரூ.30000 கோடிக்கு மேல் உள்ளது.

இத்தகைய காரணங்களால் தொலை தொடர்புத்துறை சேவையில் இருந்து வெளியேறும் முடிவினை அந்நிறுவன நிர்வாக குழு எடுத்துள்ளது. இதுதொடர்பாக டாடா நிறுவன உயர் அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பாக மத்திய தகவல் தொழில் தொடர்புத் துறை அதிகாரிகளை சந்தித்து தங்கள் முடிவினை முறைப்படி தெரிவித்தனர். மேலும் அது தொடர்பான வெளியேறும் நடவடிக்கைகளை ஒரு மாதத்துக்குள் துவங்க இருப்பதாகவும் அவரகள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் மார்ச் 31, 2017 அன்று வெளியிடப்பட்ட ஆணடறிக்கையின்படி அந்நிறுவனத்தில் 5101 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்காக அந்நிறுவனம் மூன்று விதமான வெளியேறும் திட்டங்களை வகுத்துள்ளது. அவையாவன பின்வருமாறு:

முதலாவதாக ஊழியர்களுக்கு வேறு வேலை தேட வசதியாக மூன்று முதல் ஆறு மாத காலங்கள் வரை ‘நோட்டிஸ் பீரியட்’ அளிக்கபப்டும்.

இரண்டாவதாக இந்த காலத்துக்கு முன்னதாக வெளியேற விரும்புவர்களுக்கு என தனிப்பட்ட 'சிவியரன்ஸ் பேக்கேஜ்' வழங்கப்படும்.

மூன்றாவதாக மூத்த ஊழியர்களுக்கு என 'தானாக முன்வந்து ஓய்வு பெறும்' திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு சிறு பகுதியினர் மட்டும் அவரது திறமைகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டுத்தன்மை அடிப்படையில் டாடா குழுமத்தின் பிற நிறுவனங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று நம்பகமான நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives