களத்தில் குதித்தது வோடஃபோன்: 90ஜிபி, அளவில்லா அழைப்பு வெறும் ரூ.399க்கு அதுவும்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2017

களத்தில் குதித்தது வோடஃபோன்: 90ஜிபி, அளவில்லா அழைப்பு வெறும் ரூ.399க்கு அதுவும்..

டேட்டா போர் தொடர்கிறது என்றுதான் ஆரம்பிக்க வேண்டும்.. ஆம் போட்டிப் போட்டுக் கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.

ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக அளவில்லாத அழைப்பா? 100 ரூபாய்க்குக் குறைவாக டேட்டாவா என்று மின்சாரத்தில் கை வைத்தது போல அலறிய தொலைதொடர்பு நிறுவனங்கள் இன்று சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜியோ வருகைக்குப் பின்பு சில நூறுகளுக்கு அளவில்லா அழைப்பையும், ஒரு நாளை ஒரு ஜிபியையும்  தாண்டி, எல்லா மாதங்களும் பிப்ரவரி மாதம் போல 28 நாட்கள் என்று அறிவித்து வந்தது இன்று தலைகீழாக மாறிப் போனது.

இரண்டு மாதம், 3 மாதங்களைத் தாண்டி தற்போது வோடஃபோன் 6 மாதத்துக்கான ரீ-சார்ஜ் சலுகையை அறிவித்துள்ளது.

ப்ரீ-பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வோடஃபோன் அறிவித்திருக்கும் சலுகை திட்டத்தில், வெறும் ரூ.399க்கு 90 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அளவில்லா அழைப்புகள் வழங்கப்படும். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல 6 மாதங்கள் வரை இந்த சலுகைக்கான கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சலுகை ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கா அல்லது புதிய வாடிக்கையாளர்களுக்கா என்பது குறிப்பிடப்படவில்லை. விழாக்காலச் சலுகையாக இந்த திட்டத்தை வோடஃபோன் அறிவித்துள்ளது.

இது குறிப்பிட்ட எண்களுக்கான சலுகை என்பதால், அனைவரும் உங்கள் எண்ணுக்கு இந்த சலுகை இருக்கிறதா என்பதை பரிசோதித்த பின்பு ரிசார்ஜ் செய்து கொள்வது அவசியம்.

ஏற்கனவே 399 திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்திய நிலையில், அதே திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது. ஆனால், அவர்களை எல்லாம் தாண்டி தற்போது வோடஃபோன் தனது புதிய சலுகையை அறிவித்துள்ளது.

இது தீபாவளி வரை மட்டுமே கிடைக்கும் சலுகையா அல்லது அதற்குப் பிறகும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும் தகவல் இல்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி