ஏழாவது ஊதியக்குழு பிரச்சினையால் போராட முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2017

ஏழாவது ஊதியக்குழு பிரச்சினையால் போராட முடிவு!

ஏழாவது ஊதியக்குழு சம்பளப் பிரச்னையால் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்திற்கு போலீசார் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்தும் போது காவல்துறையினருக்கு இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து 10ம் வகுப்பு தரத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட பணி, வார விடுப்பு, விடுமுறை தினங்களில் பணி செய்தால் இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
மக்கள் தொகைக்கேற்ப காவலர்களை நியமிக்க வேண்டும்.

சென்னையில் வழங்கப்படுவதுபோல மற்ற மாவட்டங்களுக்கும் உணவுப்படி வழங்க வேண்டும். காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை காவல்ர்கள் நீண்ட காலமாக முன்வைத்து வருகின்றனர்.
தமிழக அரசு 7வது ஊதியக்குழுவை அமல்படுத்த உள்ள நிலையில் அதில் காவல்துறையினருக்கு உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக அக்டோபர் 30ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க வாட்ஸ் அப்பில் போலீசார் தகவல் பரப்பி வருகின்றனர்.
முதல்கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் அடுத்த கட்ட போராட்டங்களையும் அறிவிக்க காவலர்கள் முடிவு செய்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. எனினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று காவலர்கள் விடாப்பிடியாக உள்ளதாக தெரிகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி