தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2017

தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

தபால் நிலையம் மற்றும் பல அரசு திட்டங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ள நிலையில்,
மேலும் சில துறைகளில் ஆதாரை கட்டாயமாக்கும் நடைமுறைகளைத் மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இதுகுறித்து மத்திய வருவாய்த் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தபால் நிலையம், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா மற்றும் பப்ளிக் பிரோவிடண்ட் ஃபண்ட் ஆகியவற்றில் சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பம் செய்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காகக் காத்திருக்கும் ஆசிரிய நண்பர்களுக்கு வேண்டுகோள்..!

    அக்-21 சனிக்கிழமை மதியம் 2-00 மணிக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறும். பேரா.ராஜா அவர்களின் செல்பேசி எண்.7904659899
    -------------------------
    மாற்றுத்திறனாளிகள் என்ற அடிப்படையில் யாருடைய உரிமைகள் பாதிக்கப்பட்டாலும், தலையீடு செய்வது, போராட்டங்கள் நடத்துவது, தேவைப்பட்டால் வழக்குகளைத் தொடுப்பது.. என தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம்(TARATDAC).

    அந்த வகையில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களாக உள்ள மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளும் விதிவிலக்கல்ல.

    சமீபத்தில் முதுகலைப் பட்டதாரிஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்களை நிரப்புவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியன சில தவறுவகளை செய்து பாரபட்சம் காட்டின. அவைகளை எதிர்த்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்(TARATDAC) தொடுத்த வழக்கில் வெற்றிகள் கிடைத்துள்ளன.

    வழக்கு இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், இதுவரை வெளிவந்துள்ள அனைத்து இடைக்கால தீர்ப்புகள் குறித்தும் பெரும்பலான செய்தித்தாள்கள் நல்ல முறையில் செய்திகளை வெளியிட்டள்ளன. அவர்களுக்கு நமது நன்றிகள். சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியிட்டுள்ளோம். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆசிரியர் நண்பர்களுக்கும் மாவட்டக்குழுக்களின் சார்பில் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்காக கோரிக்கை மாநாடு ஒன்றையும் நடத்தி, நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கினோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணிக்காகக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்காகத் தனியான கூட்டம் சென்னையில் நடத்தி, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலரை நேரில் சந்தித்து அவரின் நடவடிக்கைகளை கோரியுள்ளோம்.

    ஆனால், சங்கத்தில் உறுப்பினர் அல்லாத. அல்லது நமது வேண்டுகோள்களுக்கு எந்த வகையிலும் செவி சாய்க்காத இன்னும் பல 100-க்கணக்கான பேர் சங்கத்தின் மாநில தலைவர்களுக்கு தொடர்பு கொண்டு ஒவ்வொருவரும் தொலைபேசியிலேயே வழக்கு குறித்து விளக்கம் சொல்லச் சொல்கின்றனர்.

    இது சாத்தியமற்றது. சரியல்லவும்கூட என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். TARATDAC மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொள்ளச் சொன்னாலும் அவர்களை தொடர்புகொள்வதில்லை. அல்லது மாவட்டத்தில் மாநில தலைவர்கள் நேரடியாக வரும்போது சந்தித்து நேரில் விளக்குவோம் என்று தெரிவித்தாலும்கூட அதற்கும் ஒத்துழைப்பு தருவதில்லை.

    உதாரணமாக நேற்று(அக்-5) தருமபுரி போராட்டம் முடிந்த பின்னர் கிருஷ்ணகிரியில் மாலை 4 மணிக்கு சந்திக்கலாம் என்று நேரம் ஒதுக்கியும் தொலைபேசியில் தொடர்புகொண்ட 10-க்கும் மேற்பட்டோர் அங்கு வரவில்லை. எந்த அக்கறையும் காட்டவில்லை. மாறாக (TARATDAC) சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலர் பெரியசாமியிடம்.. "நீங்கள் கேட்டு வந்து சொல்லுங்கள்" என போனில் பேசியுள்ளனர். இதெல்லாம் எந்த விதத்தில் சரியாகும்.? என்பதை சம்பந்தப்பட்ட நண்பர்கள் சிந்திக்க வேண்டும்.

    எனவே, மாற்றுத்திறனாளி ஆசிரியர், ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கும் நண்பர்களுக்கு மீண்டும் ஒரு கூட்டத்தைக் கூட்டலாம் என இந்தப் பணிகளை கவனித்து வரும் எமது சங்க மாநில செயலாளர்
    பேரா. ராஜா கேட்டுள்ளார்.

    அதன்படி அக்-21 சனிக்கிழமை மதியம் 2-00 மணிக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும். சம்பந்தப்பட்ட அனைவரும் நேரில் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    பேரா.ராஜா அவர்களின் செல்பேசி எண்.7904659899
    I'm Ganesh 9941170059

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி