பாலின் தரத்தை கண்டறிய லாக்டோ மீட்டர்: ஆவின் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2017

பாலின் தரத்தை கண்டறிய லாக்டோ மீட்டர்: ஆவின் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அனைத்து ஆவின் பால் கொள்முதல் வாகனங்களிலும் ஜிபிஆர்எஸ் கருவி, பாலின் தரத்தை கண்டறிய லாக்டோ மீட்டர் கருவிகளை 4 மாதங்களில் பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பாண்டவர்மங்கலம் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் குமார் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களிடம்இருந்து ஆவின் நிறுவனம் சார்பில் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் முழுவதும் ஆவின் நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாலின் தரம் சோதிக்கப்படுகிறது. ஆவின் நிறுவனங்களில் பாலின் கொழுப்பு மற்றும் தரத்தை அளவீடு செய்யும்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன.

இந்த ஆய்வில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் பல நேரங்களில் தரமான பாலையும் ஆவின் அதிகாரிகள் நிராகரிக்கின்றனர்.நிராகரிக்கப்பட்ட பாலை பால் உற்பத்தியாளர்களிடம் திரும்ப வழங்குவதில்லை. எனவே பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே பாலின் தரத்தை உறுதி செய்வதற்காக, அனைத்து ஆவின் வாகனங்களிலும் பாலின் தரத்தை ஆய்வு செய்யும் கருவிகளை பொருத்தவும், ஆவின் பால் வாகனங்களைக் கண்காணிக்க ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பின் பால் கொள்முதல் வாகனங்கள் அனைத்திலும் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தவும், பாலின் தரத்தை கொள்முதல் செய்யும் இடத்திலேயே உறுதி செய்யும் லாக்டோ மீட்டர், ஸ்கேனிங் கருவி மற்றும் பால் கொள்ளவை கண்டறியும் கருவிகளை பொருத்தவும் 4 மாதங்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நீதிமன்ற உத்தரவின் மூலம் பால் கொள்முதலில் வெளிப்படைத் தன்மை நிலவும், முறைகேடுகள் தடுக்கப்படும் என பால் முகவர்கள் நம்பிக்கை தெரிவித் துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி