வெளிநாட்டு தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையளிக்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2017

வெளிநாட்டு தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையளிக்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள், ஆவணங்களைப் பொதுமக்களிடம்இருந்து கொடையாக பெறும் திட்டத்தை முதல்வர்பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித் துறை தொடர்பான மானிய கோரிக்கையின் போது, உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையாக வழங்குதல், அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்களை பொதுமக்களிடம் இருந்து கொடையாக பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது.உலக மொழிகளில் தொன்மையான தமிழ் மொழியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரியநூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகளிடம் இருந்து அரியவகை நூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் வழங்கலாம்.நூலகத்துறை பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களை அணுகி நூல்கள் உள்ளிட்டவற்றை பெறுவார்கள். இவ்வாறு நூல்கள், ஆவணங்கள், ஓலைச் சுவடிகளை ஒப்படைக்கும் கொடையாளர்கள் நூலக வார விழாவின் போது கவுரவிக்கப்படுவர்.

ஒரு லட்சம் நூல்கள்

கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு உயிர்நாடியாய் விளங்கும் தமிழ் நூலகங்களுக்கு நூல்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதன் முதல் கட்ட மாக பதிப்பாளர்கள், கொடையாளர்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து தமிழில் இலக்கியங்கள், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு தொடர்பான நூல்கள், பல்வேறு துறைசார்ந்த புதிய நூல்கள் கொடையாகப் பெறப்படுகிறது.இந்த திட்டத்தின்படி ஒரு லட்சம் நூல்கள் யாழ்ப்பாணம் பொது நூலகம், மலேயா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, தலைமைச் செயலகத்தில், முதல்வர் கே.பழனிசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் அரிய வகை நூல்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ், இயக்குநர் ரெ.இளங்கோவன், பொது நூலக இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி