ஆல்பர்ட் நோபல் பிறந்தநாள் - கவிதை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2017

ஆல்பர்ட் நோபல் பிறந்தநாள் - கவிதை

*ஆல்பர்ட் நோபல் பிறந்தநாள்*
**********************************
பரந்த உலகின்
சிறந்த கெளரவத்திற்கான
'பட்டாபிஷேகம்'
*நோபல்*



ஆறு
துறைகளுக்கான
அங்கீகாரம்
*நோபல்*

வாழ்ந்தவனின்
அடையாளம்
*நோபல்*

வாழ்ந்ததற்கான
அடையாளம்
*நோபல்*

*டைனமைட்*
என்னும்
சக்திமூலத்தின்
இரசாயன
ரெளத்திரனே
*ஆல்பர்ட் நோபல்*

இந்த
தனிமனித
படைப்பு
முதன்முதலில்
மனிதக்குல
நியமனத்தை நிறுத்த
சிவப்புக்கொடியை
சிருஷ்டித்தது.

இந்தக்
கலியுக பிரம்மனின்
படைப்பு  - தன்
சகோதரனோடு
பல்லுயிர்களையும் - தன்
பசிக்குப்
படையலாக்கியது.

வேதனை - இவர்
விழிகளை
ஈரமாக்கியது.

இவர்
சாதனை
இருதயத்தை
இறுக்கமாக்கியது.

தன்
கண்டுபிடிப்பில்
படிந்திருந்த
பாவத்தைக் கழுவ
இவரே
ஒரு கங்கையை
உருவாக்க
கால்கோள் நடத்தினார்.

தன்
நிலைமாறினார்
தன்
பிறப்புக்கு
நிலைத்தத்தன்மையை
பிரகடனப்படுத்தினார்.


மனுகுல
வாழ்விற்காக
மறுபடி
மறுபடி
உயிர்த்தெழும்
உத்தியைக்
கண்டுபிடித்தார்

வெடிமருந்தினால்
விளைந்த -தன்
பொருட்செல்வத்திற்கு
ஒரு
பிடிமானத்தை
நட்டு
விருட்சமாக்கினார்.

நோபலென்னும்
அந்த
அட்சயபாத்திரம்
அகிலத்தின்
தலைச்சிறந்த
படைப்பாளியின்
பசியாற்றுகிறது.

ஆம்!
இன்றுவரை
விருதுகளின்
உச்சம்
*நோபல்*

மொழி
இனம்
மதம் - என
திரைக்கடல் கடந்த
திரவியம்
*நோபல்*


தேசம்
சூட்டிடும்
விருதைவிட
தேசமே
சூடிக்கொள்ளும்
விருது
*நோபல்*

இன்றுவரை
மறைந்தப் பின்னும்
வாழ்ந்து வரும்
அழியாத அதிசயம்
*ஆல்பர்ட் நோபல்*.

மீண்டும்

வாழ்ந்தவனின்
அடையாளம்
*நோபல்

மீண்டும்
மீண்டும்

வாழ்ந்ததற்கான
அடையாளம்
*நோபல்*.

✍ வைரபாரதி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி