ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விளக்க கூட்டம்: அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடைபெறுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2017

ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விளக்க கூட்டம்: அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடைபெறுகிறது

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கை விளக்கக் கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதிய முறைகளை ஒழித்துவிட்டு அனைத்து பணியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர். ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறது.அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட டி.எஸ்.ஸ்ரீதர் குழுவின் அறிக்கைக்குப் பின்னர் முடிவெடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 1.1.2016 முதல் கணக்கிட்டு நிலுவைத்தொகையை வழங்குமாறு அரசை வலியுறுத்தி வருகிறது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு

இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கை விளக்கக் கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும்விளக்கக் கூட்டத்தில், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அ.மாயவன், மு.அன்பரசு, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச்செயலாளர் ஆர்.தாமோதரன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் கே.சாந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி