பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய பயிற்சியளிக்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2017

பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய பயிற்சியளிக்க முடிவு

புதுடில்லி: ''அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பயிற்சி பெறாமல், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு, கட்டாய பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர், உபேந்திரகுஷ்வாஹா, கூறினார்.
பீஹார் மாநிலம், பாட்னாவில், மத்திய அமைச்சரும், லோக் சமதா கட்சி தலைவருமான உபேந்திர குஷ்வாஹா, நேற்று கூறியதாவது: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள், ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என, அரசு முடிவு செய்துள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பயிற்சியின்றி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு, 2015க்குள் பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இலக்கை எட்ட முடியவில்லை. இதையடுத்து, கல்வி உரிமை சட்டத்தில், அரசு, திருத்தம் செய்தது; அதன்படி, பயிற்சியின்றி பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும், தேசிய திறந்தநிலை பள்ளி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, 2019, மார்ச்சுக்குள் பயிற்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அவகாசத்துக்குள் பயிற்சி பெறாமல், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், உடனடி யாக பணி நீக்கம் செய்யப்படுவர்.இதற்காக, பாடத் திட்டம் ஒன்றை, தேசிய பள்ளி கல்வி நிறுவனம் தயாரித்துள்ளது. 'ஆன்லைன்' வழியாக, இந்த பயிற்சியளிக்கப்படும். ஆசிரியர்கள், இதற்காக தினமும், மூன்று மணி நேரம் செலவழிக்க வேண்டிஇருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி