மதப் பெயர்களை நீக்க வேண்டும்: யூ.ஜி.சி!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2017

மதப் பெயர்களை நீக்க வேண்டும்: யூ.ஜி.சி!!!

பல்கலைக்கழகங்களில் உள்ள மதப் பெயர்களை நீக்க வேண்டும் என மத்தியஅரசுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும்,
மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை யூ.ஜி.சி மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் 10 பல்கலைக்கழகங்களில் இந்த அமைப்பைச் சேர்ந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் உள்ள மத பெயர்களால் அங்கு பயிலும் மாணவர்களிடையே வேறுபாடு நிலவி வருகிறது. மத்திய அரசின் நிதியின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மதப் பெயர்களை பிரதிபலிக்கக் கூடாது.அதனால், பல்கலைக்கழகங்களில் உள்ள மதப் பெயர்களை நீக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்குப் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை, அலிகார் பல்கலைக்கழகம் என்றும், பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தை, பனராஸ் பல்கலைக்கழகம் என்றோ அல்லது அந்த பல்கலைக்கழகங்களை நிறுவியவர்களின் பெயர்களிலோ மாற்றி அமைக்கலாம் என யூ.ஜி.சி. பரிந்துரை செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி