ரேஷனில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2017

ரேஷனில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

நியாயவிலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயருகிறது. புதிய சர்க்கரை விலை நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது ரூ.13.50 விலையில் விற்கப்படும் ஒரு கிலோ சர்க்கரை ரூ.25 ஆக விலை உயர்ந்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

3 comments:

  1. பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ள இந்தியாவில் நடுத்தர, சாமானிய, தினக்கூலி மக்களின் உயிரோட்டத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதால் தான் கடையோட பேரே நியாய விலைக்கடை. ஆனால் கோடி கோடியாக கொள்ளை அடித்தவனையும் , அடித்துக் கொண்டிருப்பவனையும். ஜாமினில் எளிதாக விட்டு வேடிக்கை பார்க்கும் நீதிமன்றமே , நியாயமில்லையா????????
    மக்களுக்கு அரசுகளின் மீது இருக்கும் நியாயமான எதிர்பார்ப்புகள்
    1. வரி என்பது அனைவருக்கும் சமம் என்றால், அனைவரின் வருமானமும் சமமாக இருக்க வேண்டும் அல்லவா????????
    2. சுதந்திரம் பெற்ற இத்தனை வருடங்களில் முதலில் அடிப்படை உரிமையான சுத்தமான உணவு, பாதுகாப்பான வீடு , சுகாதாரமான மருத்துவம் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றையாவது அனைவருக்கும் சமமான தரத்தில் கொண்டு சேர்க்கும் உருப்படியான ஏதாவது ஒரு திட்டமாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா???????
    3. கடைசியில் நம்பிக்கைத் தரும் நீதிமன்றமே, தேர்தலின் போது பொய் வாக்குறுதிகளைத் தந்து, நம்பிக்கைத் தந்து ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்ற பின் கூரிய ஒரு நல்ல நலத்திட்டத்தையும் கூட அனைவருக்கும் சமமாக கொண்டு செல்லாமல், நம்பிக்கைத் துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை நீங்களாவது நியாயம் கேட்கக் கூடாதா?????????????

    ReplyDelete
  2. PHH NPHH 2 விதமாக கார்டு போட்டதே இதுக்கு தான்...

    ReplyDelete
  3. (௮)நியாய விலை கடை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி