டூவிலர் பின் இருக்கைக்குத் தடை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2017

டூவிலர் பின் இருக்கைக்குத் தடை!!!

கா்நாடகாவில் திறன் குறைந்த இருசக்கர வாகனங்களில் பின்னால்உள்ள இருக்கைகளுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு நேற்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.சாலை விபத்துக்களின்போது, இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவரைவிட, பின்னால் இருப்பவரே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
100 சி.சிக்கும் குறைவான 25% இருசக்கர வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதனால், பின் இருக்கைக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 சி.சிக்கும் குறைவான இருசக்கர வாகனங்களில் பின் இருக்கைகளுக்குத் தடை விதிக்க, கர்நாடக மாநில மோட்டார் வாகனச் சட்டத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், அதை நடைமுறைப் படுத்தப்படவில்லை என கர்நாடக மாநிலப் போக்குவரத்து ஆணையர் தயானந்தா தெரிவித்துள்ளார்.எனினும், இந்த விதி புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்குத் தான் பொருந்தும். அதன்படி, இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் வாகன ஓட்டிகள் மட்டும் அமரும் வகையிலேயே இருக்கையை அமைக்க வேண்டும். பழைய இருசக்கர வாகனங்களுக்கு இந்தப் புதிய விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி