புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2017

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதன் பின்னர் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வழக்கமாக அக்டோபர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு, வழக்கத்துக்குமாறாக, தென்மேற்கு பருவமழை காலத்தில், தமிழகத்துக்கு நல்ல மழை கிடைத்துள்ளதுடன், அக்டோபர் 2-வது வாரம் நிறைவடையும் நிலையில், இன்னும் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கும் எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இதற்கிடையில், வழக்கத்துக்கு மாறாக தென்மேற்கு பருவக்காற்று விலகாத நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் வரும் 15-ம் தேதி வாக்கில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட மேற்கு திசையில் ஒடிசா நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளது.

இதனால் தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறித்து, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகே கணிக்க முடியும்.அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளது. . நேற்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, ஓசூர்,வாணியம்பாடியில் தலா 7 செமீ, உடுமலைப்பேட்டை, போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, வால்பாறையில் தலா 5 செமீ, பெரியகுளம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி