தமிழகத்தில் நடந்த ‘நீட்’ தேர்வு போராட்டம் பற்றிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2017

தமிழகத்தில் நடந்த ‘நீட்’ தேர்வு போராட்டம் பற்றிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைப்பு.

தமிழகத்தில் 'நீட்'தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்குதடை கோரும் வழக்கின் மீது தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.
தமிழ்நாட்டில் 'நீட்'தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாக வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டும். சட்ட விரோதமான போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்'என்று கூறி இருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 18-ந்தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏஎம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோர்ட்டு உத்தரவின்படி தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜர் ஆகி, இந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். பிரமாண பத்திரம் இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தமிழ்நாட்டில் போராட்டங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமை தொடர்பான விளக்கத்தை பிரமாண பத்திரம் மூலம் தலைமைச் செயலாளர் 2 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். நேற்று இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்செய்யப்பட்டது.

அதில், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு இணங்க, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நீட் தொடர்பான எந்த போராட்டத்துக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும் தற்போது தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீராக கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, நீதிபதிகள் தமிழக அரசின் பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி