புதிய ஓய்வூதியத் திட்டம்: ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2017

புதிய ஓய்வூதியத் திட்டம்: ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்

தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலர் செ.பாலச்சந்தர் கூறினார்.
திருவண்ணாமலையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.மோசஸ் தலைமைவகித்தார். திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் ஜி.ரமேஷ், மாவட்டச் செயலர் என்.சீனுவாசன், மாவட்டப் பொருளாளர் ஏ.அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொருளாளர் ச.ஜீவானந்தம் வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலர் செ.பாலச்சந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கொண்ட ஜாக்டோ -ஜியோ சார்பில் நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் பங்கேற்றது. எங்களின் முக்கியக் கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். இதுகுறித்து தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழுவின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாவிட்டால், ஜாக்டோ - ஜியோவுடன் இணைந்து மீண்டும் போராட்டம் நடத்தப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார். கூட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.ஜோதிபாபு உள்பட 500-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி