எம்ஜிஆர் விழாவுக்காக கரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை: தலைமை செயலாளர் விளக்கம் தராவிட்டால் வழக்கு - திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2017

எம்ஜிஆர் விழாவுக்காக கரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை: தலைமை செயலாளர் விளக்கம் தராவிட்டால் வழக்கு - திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக கரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது தொடர்பாக தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

அரசு செலவில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாக்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி பள்ளி மாணவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களுக்கு அதிமுக அரசு அழைத்துச் செல்கிறது. அரசு செலவில் நடைபெறும் விழாக்களை எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அரசியல் மேடையாக முதல்வரும், துணை முதல்வரும் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து திமுக சார்பில் எதிர்ப்பையும்,கண்டனத்தையும் தெரிவித்துள்ளோம்.கரூரில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் பெண்களை கட்டாயப்படுத்தி வேன்களில் அழைத்துச் செல்வதாக தகவல் வந்துள்ளது. அவ்வாறு வேன்களில் அழைத்துச் செல்லும் காட்சிகள் முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும், எம்ஜிஆர்நூற்றாண்டு விழாவுக்காக நேற்று (அக்டோபர் 4) அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனர்.எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர்தான் நடத்துகிறார். எனவே, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.

இன்று இல்லாவிட்டாலும் நாளை அவர்எந்த இடத்தில் இருந்தாலும் விளக்கம் அளித்தாக வேண்டும்.டெங்குவை ஒழிக்க ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்தப் பணம் எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை. குட்கா விற்பனைக்கு மாமூல் வாங்கியவர்கள், டெங்கு பரவுவதற்கு மாமூல் வாங்குகிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி