மாணவர் பாதுகாப்பு விதி : சி.பி.எஸ்.இ., சிறப்பு கமிட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2017

மாணவர் பாதுகாப்பு விதி : சி.பி.எஸ்.இ., சிறப்பு கமிட்டி

நாடு முழுவதும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிகளை உருவாக்க, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சிறப்பு கமிட்டியை உருவாக்கி உள்ளது.
ஹரியானாவில் உள்ள, ரையான் சர்வதேச தனியார் பள்ளியில்,பள்ளி வேன் உதவியாளர் ஒருவன், 7 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து, கொலை செய்தான். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யும்படி, பள்ளி நிர்வாகங்களுக்கு, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியது. நாடு முழுவதும், அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் பாதுகாப்புக்கு உரிய கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்த விதிகள் வகுக்கப்பட உள்ளன.

இந்த ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க, சி.பி.எஸ்.இ., சார்பில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 'இந்த கமிட்டியினர், உரிய நிபுணர்களுடன் ஆலோசித்து, மாணவர் பாதுகாப்பு விதிகளைஏற்படுத்துவர். அந்த விதிகள் விரைவில் அறிவிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகார பிரிவு துணை செயலர், ஜெய்பிரகாஷ் சதுர்வேதி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி