Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

என்றும் மனிதக்குலத்தின் மகுடமான *எர்னஸ்டீன் சேகுவாரா* வின் நினைவு தினம் இன்று. அந்தப் போராளிக்கு இந்தக் கவிதை அர்ப்பணம் - வைரபாரதி

எர்னஸ்டீன் சே குவாரா*
***************************

ஐரோப்பாவின்
சர்க்கரைக் கிண்ணம்
*கியூபா*

கியூபாவின்
சர்க்கார் சின்னம்
*சே குவாரா*

*சே* என்பது
அர்ஜெண்டீனா
அகராதியில்
*தோழன்*

நம்
அமுதத் தமிழிலோ
*சிவப்பு*

ஆம்
அந்த
சிவப்புமனிதன்
*அர்ஜெண்டீனாவின்*
அடிவயிற்றில் தோன்றி,

*கியூபாவின்*
இதயமாகி

*பொலியாவில்*
புகழிடமெய்தினான்

முழுமையாக
வாழ்ந்து
முடித்தவர் பட்டியலில்
முதலிடம் பெற்றவர்
*சே குவாரா*

*லின்ச்-செர்னா*
தம்பதியரின்
தலைமகன்
*சே குவாரா*

கரீபியக் கடலோரத்தில்
கரும்புக் காடாகவும்
அங்கு
அரும்பு தேசமாகவும்
கிளர்ந்து வந்த
கியூபாவின் வளத்தை
அட்டைப்பூச்சியாய்
உறிஞ்சுக் குடித்தது
*அமெரிக்கா*

அப்பூச்சியினை
வேரறுத்து
*காஸ்டோவின்*
கையில் தந்த
'மாஸ்ட்ரோ'
*சே குவாரா*

கம்யூனிசத்தின்
கம்பீரம்  *சே*

மார்க்ஸின்
மனசாட்சி  *சே*

மருத்துவத்தின்
அடையாளம்   *சே*

போர்க்களங்களே
விரும்பும்
போராளி   *சே*

கியூபாவின்
முதலும்
முடிவும்   *சே*

ஆஸ்துமா
 *சே* வின்
உயிரை 
செல்லரித்தாலும்
அவர்
ஆன்மா
சில்சில்லாய்
அரித்தது
அமெரிக்காவைதான்...

1967, அக்டோபர் - 9
மனிதக்குலத்தின்
மாசற்ற போராளியின்
சரித்திர சாளரத்தின்
வழியே
சொட்டிக்
கொண்டிருக்கும்
கடைசி மணித்திவலைகள்
இதோ!

காலை 6 மணி
*ஃபெலிக்ஸ்* எனும்
சி.ஐ.ஏ
உளவாளியின்
உண்மைத் தன்மை
அமெரிக்காவின்
செவிட்டு செவிகளுக்கு
உரைக்கல்லானது.

காலை - 10 மணி
அமெரிக்காவின்
அறைகூவல்
இனி இவனை
உயிருடன் விசாரிப்பது
உசிதமில்லை

500, 600 - என்று
கோடியில்
ஒருவனாக பிறந்த
*சேகுவை* 
கொலைச்செய்ய
குறியீடு வருகிறது.

*மரியோ ஜெமி*
பொலிவியா சர்ஜன்
*சே* வை
பலியிடப் பணியமர்த்தப்பட்டவன்.

பிற்பகல் 1 மணி
உலகத்தாரின்
நெஞ்சுக்குள்
இன்றளவும்
நின்றுக்
கொண்டிருக்கும்
*சேகுவை*
மண்டியிட்டு
சாகடித்தான்
சதிகாரக் கோழை
சர்ஜன் மரியோ! .

சரியாக மணி 1.10
மனிதக்குல
மணிமகுடத்தின் முன்
துப்பாக்கியும்
மண்டியிடுகிறது.
மன்னிப்பும் கேட்கிறது.

அதற்கு
தோதான சாட்சியாய்
ஒரு
தோட்டா
துளை வழியாய்
துவண்டு வருகிறது.

*சே குவாரா*
என்னை மன்னித்துவிடு!

*சே குவாரா*
உன்னை நானும் நேசிக்கின்றேன்.

*சே குவாரா*
இந்தப் 
பாவியின் பிடியில்
வாழ்வதைவிட
உந்தன்
இருதயத்தின் மடியிலே
இறந்து
போகிறேன் - என

துப்பாக்கியின்
வாய் வழியே
புறப்பட்டு
சாதி  இனம் 
மொழி  தேசமென
பேதம் பாராமல்
போராடிய

அந்தப்
புரட்சியாளனின்
இருதய தேசத்தினுள்
நுழைந்து
விடுதலை வாழ்வை எய்தியது
அந்தத் 'தோட்டா'.

*சே குவாரா*
உமது உயிர்
1.10 க்குப் பறிக்கப்பட்டாலும்

ஒன்று பத்தானது
பத்து நூறானது
நூறு ஆயிரமானது
ஆயிரம் இலட்சமானது,
இலட்சம் கோடியானது.

இன்று
கோடிக்கோடி
புரட்சித்தாய்களின்
புதல்வர்களாய்
நீதான் !
விதைக்கப்
பட்டிருக்கின்றாய்!.

நீயே தான்!
விளைந்திருக்கின்றாய்

புரட்சி
ஒருபோதும்
ஆகாது
வறட்சி !!!...


✍ வைரபாரதி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives