Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Oct 29, 2017

திறனற்ற மனிதர்கள் பிறக்கவே இல்லை -பேச்சாளர் 'மயிலிறகு' சுந்தர்ராஜன் உறுதி.

நொடி முள் நகருவதற்குள் வேகமாக கிளம்பி, அரக்கப்பறக்க பள்ளிக்கு,நாலுக்கால் பாய்ச்சலில், சிறுவர்கள் ஓடும் காட்சிகளை, தினசரி பார்க்கலாம்.கிட்டத்தட்ட, 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பை முடித்த பின், இறுதித்தேர்வில்வாங்கும்,
மதிப்பெண்களை மட்டும் காரணம் காட்டி, 'எதற்கும் பிரயோஜமில்லாதவன்'என முத்திரை குத்துக்கிறது, இன்றைய கல்விமுறை.கணிதத்தில் சதம் அடித்து, அறிவியலில் பார்டரில் பாஸ் ஆகும் மாணவரை, முட்டாள்என, அடையாளம் காட்டுவது சரியா? திறமையில்லாத மனிதர்கள், இன்னும்பிறக்கவேயில்லை.தனித்திறன்களை அடையாளம் காட்டி, வாழ்வியல் கல்வியை கற்றுத்தருவது தான், சிறந்தபாடத்திட்டமாக அமையும் என, தனக்கே உரித்தான தனித்துவ குரலில் வார்த்தைகளைவீசினார் 'மயிலிறகு' சுந்தர்ராஜன்.சூலுார், நடுப்பாளையம் என்ற குக்கிராமத்தை சேர்ந்த, சுந்தர்ராஜனுக்கு,தன்னம்பிக்கை பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் எனபன்முகங்கள் உண்டு.

ஆசிரியப்பணிக்காக பல விருதுகள் பெற்ற, சுந்தர்ராஜனிடம், தன்னம்பிக்கைசொற்பொழிவு குறித்து கலந்துரையாடிய போது...தமிழகத்தில் புதிய பாடத்திட்டம்மாற்றும் பணிகள் நடக்கின்றன.சர்வதேச அளவுக்கு பாடத்திட்டத்தை உயர்த்துவதால், நல்ல இன்ஜினியர்கள்,டாக்டர்கள், அறிவியலாளர்களை உருவாக்கிடலாம். ஆனால், நல்ல மனிதர்களை உருவாக்கமுடியுமா என்பது தான், முதல் கேள்வி.அ, ஆ... என வார்த்தைகளை அறிமுகப்படுத்தும்முன், நல்லொழுக்கத்தை போதிக்க வேண்டியது அவசியம். இதற்காக, 'செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை' என, பெரியதாக எழுதி, பள்ளிக்கூடங்களில் ஒட்டுவதற்கு அல்ல,நன்னெறி வகுப்புகள்.கதைகள் வாயிலாக, ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். இது, ஆசிரியர்கள் கையில் தான்உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தால், லட்சக்கணக்கான துடிப்பான இளைஞர்களைஅடையாளம் காண முடிந்தது. இவர்களை வழிநடத்த ஒரு விவேகானந்தர் இல்லை.

உங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்மென நினைத்தால், அவர்களிடம் உள்ள,தனித்திறன்களை அடையாளம் காண்பது அவசியம்.குழந்தையின் முதல் உலகம் பெற்றவர்கள் தான். இறக்கை முளைத்துவிட்டதுஎனஅறிந்தால், பறக்க வாய்ப்பு கொடுங்கள். சொந்த காலில் நிற்க பழக்குங்கள். இந்தவாழ்வியல் கல்வி, பள்ளி அறைகளில் மட்டுமல்ல, வீட்டிலிருந்தும் துவங்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நல்லதோர் வீணை செய்தே என்ற முண்டாசு கவிஞனின் வார்த்தைகள் காற்றில் கலந்துஇசைக்க விடைபெற்றோம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி