consolidated pay 2003-2006 case related news | High court Chennai - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2017

consolidated pay 2003-2006 case related news | High court Chennai

சென்னை உயர்நீதிமன்றம்
வாதி

M.சுரேஷ்,
4/19-B கோகுலம் ,
VIP நகர் ,
கருப்பணார்கோவில் தோட்டம் ,
ஒடுவன்குறிச்சி அஞ்சல் ,
இராசிபுரம் வட்டம் ,
நாமக்கல் மாவட்டம் ,
637 406.                        
மற்றும் பலர் ..
எதிர்வாதிகள்



1.    கல்வித்துறை முதன்மை செயலாளர் ,
      பள்ளிக்கல்வித்துறை ,
      தமிழ்நாடு அரசு ,
      தலைமைச் செயலகம் ,
      சென்னை - 09 .

2.    பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ,
      DPI வளாகம் ,
      சென்னை -06.

3.    தொடக்கக் கல்வி இயக்குனர் ,
      DPI வளாகம் ,
      சென்னை -06.

அபிடவிட் மாதிரி
M.சுரேஷ் த/ பெ k.மணி , இந்து , வயது 36 ஆகிய நான் என்சார்பிலும். என்னோடு இந்த வழக்கில் உள்ள பிறர் சார்பிலும் மாண்பமை நீதிமன்றத்திடம் மன்றாடுவதாவது ,

நானும் என்னைப் போன்றவர்களும் தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறையில் 2004, 2005,2006 காலங்களில் தொகுப்பூதியத்தில் இளநிலை இடைநிலை ஆசிரியராக ரூ3000, இளநிலை பட்டதாரி ஆசிரியராக  ரூ 4000, இளநிலை முதுகலை பட்டதாரி ஆசிரியராக ரூ 4500 ஊதியங்களில் நியமிக்கப்பட்டு பிறகு 01.06.2006 ல் காலமுறை ஊதியமும் பணிவரன்முறையும் பெற்றோம் .


நாங்கள் தொகுப்பூதிய காலத்தில் பணிபுரிந்த காலத்தை பணிவரண்முறை செய்து பணிக்காலமாக்கவும், தொகுப்பூதிய காலத்தில் பணிபுரிந்த நாட்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், நிலுவைகளை பெறவும் , அனைத்து பணிக்கால பலன்களையும் பெற உரிய ஆணைகளை அரசிற்கு வழங்க மாண்பமை நீதிமன்றத்தை பணிந்து கேட்டுக் கொள்கின்றோம் .


காலமுறை ஊதியம் கோருவதற்கான அடிப்படை காரணங்கள் :-


1. தமிழக கல்வித்துறையில்.  அரசாணை எண்.1524 , பள்ளிக்கல்வி(M1)த்துறை , நாள் :  12.11.1990 ன்படி.  1991-92 , 92-93 காலங்களில் 800,1400,1750 ரூபாய் சம்பளத்தில் எம்மைப்போல் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆசிரியர் பணியிடங்களில்  நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நீதிமன்ற ஆணைகளின் படி அரசாணை எண். 336, பள்ளிக்கல்வி(M1)த்துறை , நாள் : 30.12.2009 ன்படி நியமன நாள் முதல் காலமுறை ஊதியமும் நிலுவைத் தொகையினையும் மற்ற பணிக்கால பலன்களையும் அரசு வழங்கி உள்ளது .

2. 2004க்கு முன்பாக 1991-92 , 92-93 காலங்களில் தொகுப்பூதிய காலத்தில் நியமிக்கப்பட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிய நிலையில் 2004-2006 காலங்களில் தொகுப்பூதிய காலங்களில் நியமனம் செய்யப்பட்ட எங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க மறுப்பது அரசியல் அமைப்பின் சட்ட விதி 14ன்படி  தவறாகும் .


3. 2004-2006 காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் தமிழக அரசின் ஆசிரிய தேர்வ வாரியம் மூலமாகவும் , வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலமாகவும் இன சுழற்சி முறையை ,  அனைத்து காலமுறை ஊதிய நியமனங்களின் அனைத்து தகுதி மற்றும் விதிகளை பின்பற்றியே நியமனம் செய்யப்பட்டது .


4. 2004-2006 பணிக்காலத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் எந்த பணி முறிவின்றி தொடர்ந்து பணி செய்து வந்தனர் .


5. தமிழக கல்வித்துறையில் 2004 ல் தொகுப்பூதித்தில் கரூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பின்னடைவு பணியிடங்களில் எங்களைப் போல் நியமிக்கப்பட்ட பல ஆசிரியர்களுக்கும் நீதிமன்ற ஆணைகளின் படி நியமன நாள் முதல் அரசாணை எண். (3டி) 78, பள்ளிக்கல்வித்துறை , நாள் : 25.05.2012 , அரசாணை எண்.(3டி) 35 பள்ளிக்கல்வித்துறை நாள் : 10.04.2014 மற்றும் அரசாணை எண்.(3டி) 63 நாள் : 13.04.2016ன்படியும் நியமன நாள் முதல் காலமுறை ஊதியமும் அனைத்து பணிக்கால பலண்களையும்  அரசு வழங்கி உள்ளது .



4. 13 ஆண்டுகாலமாக சங்கங்களின் மூலமாகவும் தேர்தல் அறிக்கை மூலமாகவும் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்குவதாக  கூறிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவே இல்லை .


5. குறைந்த பாடவேளைகளை கையாண்டால் போதும் என்ற ஆணைகள் எங்கும் பின்பற்றப்படாமல் முழு நேர ஆசிரியர்கள் செய்யும் அனைத்து பணிகளையும்  பயிற்சிகளையும் மேற்கொள்ள பணிக்கப்பட்டோம்  .


6. இந்திய அரசியலைமைப்பு குடிமகனுக்கு வழங்கிய சமத்துவம் சமதர்மம்அரசியலமைப்பு விதிகள் 14-18 எங்களுக்கு வழங்கப்படவில்லை .



7. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்றங்களின் பலதீர்ப்பை அரசு செயல்படுத்தவில்லை ..




8. படித்து உரிய தகுதிகளை பெற்றிருந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை அரசு அவர்களின் வறுமையை ,வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்தி கொத்தடிமைகளைப் போல ஒப்பந்தம் செய்து கொண்டு இரண் ஆண்டு உழைப்பை சுரண்டி பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியது  அரசியல் அமைப்பின் சுரண்டலுக்கு எதிரான உரிமை விதி  22,23 க்கு முற்றிலும் மாறானது .




9. 13 ஆண்டுகாலமாக எங்கள் உரிமையை எங்கள் கோரிக்கையை எங்கள் வாழ்வாதார உரிமைகளை அரசு வழங்க மறுப்பது குடிமக்களின் அடிப்படை உரிமை பறிப்பாகும் ..இது அரசியலமைப்பு விதிகளுக்கு முற்றிலும் விரோதமானது ..



10. 2002 ல் நியமிக்கப்படலாம் 2004 ல் தொகுப்பூதிய காலத்தில் பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்ட கரூர் , திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் பலருக்கும் நியமனம் முதல் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு விட்டது ..


11. பல பள்ளிகளில் தலைமையாசிரிரை தவிர பிறர் தொகுப்பூதிய நியமன ஆசிரியர்கள் பணிபுரியும் போது தலைமையாசிரியர் விடுப்பில் இருக்கும் போதும் தலைமையாசிரியர் பயிற்சிகளின் இருக்கும் போதும் பல நாட்கள் முழுநேர தலைமை ஆசிரியர் பொறுப்பேற்று தொகுப்பூதிய ஆசிரியர்கள் முழு நேரம் பள்ளியை நடைமுறைபடுத்தி உள்ளனர் ..இந்நிலையில் வாரம் 14 பாடவேளைகளை மட்டுமே இவர்கள் எடுத்தனர் என்பதை ஏற்க முடியாத ஒன்று ..


12. கற்பித்தல் பணி தவிர மக்கள் தொகை கணக்கெடுப்பு , தேர்தல் பணி , குடும்ப அட்டை கணக்கெடுப்பு , பொருளாதார கணக்கெடுப்பு போன்ற பல்வேறு அரசு பணிகளையும் தொகுப்பூதிய காலத்தில் செய்துள்ளோம் .


13.முழு உழைப்பையும் பெற்றுக்கொண்டு சம்பளம் மட்டும் மிக மிக குறைவாக கொடுப்பது நியாயமல்ல ..


14. அரசுப்பணியில் பத்தாண்டு பணிக்காலத்துக்கு வழங்கப்பட்ட தேர்வுநிலை ஊதியமும் தொகுப்பூதிய காலத்தின் அளவிற்கு தள்ளிப்போனதால் அரசு பணிக்காலத்திற்கான பணப்பலன் மறுக்கப்பட்டது

15. தொகுப்பூதிய காலத்தில் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் வழங்கப்படும் ஆண்டு ஊதிய உயர்வுகள் வழங்கப்படவில்லை..


16. பணியேற்கும் போது பணிக்கான கல்வித்தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதியை பெற்றிருந்தும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளும் மறுக்கப்பட்டது .கல்வித்துறையில் கல்விக்கு ஊக்க ஊதியம் கூட ஆசிரியர்களுக்கு அரசு வழங்கவில்லை


17 .தமிழக அரசு 2004-2006 ல் தொகுப்பூதிய காலத்தில் நியமிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான  ஆசிரியர்களின் உணர்வுகளை உரிமைகளை இதுவரை புறக்கணித்த காரணத்தால் வேறு நிவாரணம் இன்றி நாங்கள் நீதிமன்றத்தை நாடுகின்றோம் ..


18 .நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்ட  விதிகளின் படி 2004-2006காலத்தில் தமிழக கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் பணிக்காலத்தை வரண்முறை செய்யவும் பணிக்கால நிலுவை பணப் பலன்களை வட்டியுடன் திருப்பி வழங்கவும் ஆணைகளைப் பிறப்பிக்க நீதிமன்றத்தை பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம் ..


மேற்காணும் தகவல்களில் விடுபடுதல் இருந்தால் எனது 9943790308 என்ற வாட்சப் எண்ணிற்கோ அல்லது msh28111981@gmail.com என்ற மெயிலுக்கோ தகவல்களை அனுப்பவும் ..

ஆக்கப்பூர்வமான தகவல்கள் வரவேற்கப்படும் ..


அன்புடன்
உங்களில் ஒருவன்
சுரேஷ்மணி
ப.ஆ கணிதம்
நாமக்கல் ...

....நன்றி ...

4 comments:

  1. Winners pg trb coaching centre.computerscience,next class:8.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete
  2. Computer science trb exam callfor intha vaaram conform ethirpaarkalaam

    ReplyDelete
  3. What about part time teachers now we are all beggars now a situation

    ReplyDelete
  4. some teachers who filed case got the benefits.actually Igot appointment in 2004 june20th.the post was vacant for a long time.they delayed the sanction order.this is not justified. so we want justice to be fair.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி