JEE EXAM - 2018 மெயின் தேர்வு அறிவிப்பு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2017

JEE EXAM - 2018 மெயின் தேர்வு அறிவிப்பு!!!

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்விநிறுவனங்களில், பிஇ, பிடெக் போன்ற இன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சிபிஎஸ்இ நடத்தும் ஜேஇஇ (ஜாயின்ட் என்டரன்ஸ் எக்ஸாமினேஷன்) பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
2018ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு தேதியை சிபிஎஸ்சி அக்டோபர் 20 அன்று அறிவித்தது.

அதன்படி, 2018 ஏப்ரல் 8ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. எனினும், கணினி வழியிலான தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 2018 ஏப்ரல் மாதம் மத்தியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜேஇஇ பிரதான தேர்வு 2018 தாள் 1 (பிஇ / பிடெக்) முதல்தாள் தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் கணினிவழியிலான தேர்வு நடத்தப்படும். தாள் 2 (பி.ஆர்ச் / பி.ப்ளான்) கணினி வழியிலான தேர்வு மட்டும் நடத்தப்படும்.தேர்வுக்கான ஆன்லைன் பதிவு 2017 டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து 2018 ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஇஇ பிரதானதேர்வு இந்தியாவில் 104 நகரங்களிலும், 9 வெளிநாட்டு நகரங்களிலும் நடைபெறும்.இந்தியாவில் உள்ள 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி), 23 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஐடி) மற்றும் 20 அரசு நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள 24,323 இடங்களை நிரப்ப ஜேஇஇ பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வை எழுத ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 65 சதவிகித மதிப்பெண்களும், இதர பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவிகித மதிப்பெண்களும் பெற வேண்டும். விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களின் ஆதார் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.2016 ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ பிரதான தேர்வில் 12 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
    2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......

    மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
    நாள்: 14:11:2017
    இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
    நேரம் : காலை 10:30.

    கோரிக்கைகள்: 📣
    🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.

    🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.

    🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.

    அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
    மேலும் விபரங்களுக்கு:
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    வடிவேல் சுந்தர்80122776142
    மாநில பொருளாளர்
    பிரபாகரன் 9047294417
    மாநில பொறுப்பாளர்
    முருகேசன் 950095482
    மாநில அமைப்பாளர்
    பரமேஸ்வரன் 9942661187

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி