NAS MODEL EXAM | OCTOBER 10 & NOVEMBER 7 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2017

NAS MODEL EXAM | OCTOBER 10 & NOVEMBER 7

☀தேசிய அடைவு ஆய்வு (NATIONAL ACHIEVEMENT SURVEY) ஆண்டு தோறும் 3, 5 & 8-ம்வகுப்பு மாணவ மாணவியரிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.

☀இந்த ஆண்டிற்கானஆய்வுகள் நடத்தப்படுவதற்கு முன்னர் மாணவ மாணவியர்களைத் தயார்படுத்தும் பொருட்டு மாதிரித் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

☀அதன்படி, அனைத்து ஆரம்ப, நடுநிலை, உயர் நிலை,மேல்நிலைப் பள்ளிகளில்  3, 5 &8-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு

☀10.10.2017 & 7.11.2017 ஆகிய இரண்டு நாட்கள் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

☀இதற்கான வினாத்தாளை முன்னதாக வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாள் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்களே 15 வினாக்களைக் கொண்டு வினாத்தாள் வடிவமைத்து தேர்வு நடத்திக் கொள்ள வேண்டும்.

☀மாதிரித் தேர்வுகள் முடிவுற்ற பின்னர் தேசிய அடைவு ஆய்விற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் விபரமும் ஆய்விற்கான தேதியும் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி