TNPSC - குரூப்-1 மெயின் தேர்வு தொடங்கியது: 25 சதவீதம் பேர் “ஆப்சென்ட்” - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2017

TNPSC - குரூப்-1 மெயின் தேர்வு தொடங்கியது: 25 சதவீதம் பேர் “ஆப்சென்ட்”

டிஎன்பிஎஸ்சி குருப்-1 மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர்.துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி,
மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 85 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் கடந்த பிப்ரவரிமாதம் 19-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. தேர்வின் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி வெளியிடப்பட்டன.அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு 4,199 பேர் தகுதி பெற்றனர். மெயின் தேர்வு அக்டோபர் 13 முதல் 15-ம் தேதி வரை 3 நாட்கள் சென்னையில் மட்டும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

42 மையங்களில்

அதன்படி, குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் நேற்று தொடங்கியது. எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி பென்டிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர் லேடி சிவசாமி ஐயர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, ராயபுரம் புனித பீட்டர் மேல்நிலைப் பள்ளி உள்பட 42 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வெழுத 4199 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில்75 சதவீதம் பேர் தேர்வில் கலந்துகொண்டதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்றும் நாளையும்

முதல் நாள் அன்று பொது அறிவு தாள்-1 நடைபெற்றது. இன்றும் நாளையும் (சனி, ஞாயிறு)பொது அறிவு தாள்-2 மற்றும் தாள்-3-ம் நடை பெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி